Loading Posts...

இனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா !!

Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS

இனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா

வரும் காலங்களில் பந்துவீச்சிலும் முழு கவனம் செலுத்த உள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி கேப்டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தவான் 47 ரன்களும், ரெய்னா 43 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் ம்டுவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 172 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நூழிலையில் வெற்றியை தவறவிட்டு, தொடரையும் இழந்தது.

இதில் இந்திய அணிக்கு பேட்டிங்கில் 43 ரன்கள் எடுத்து கொடுத்து, பவுலிங்கில் மில்லரின் விக்கெட்டையும் வீழ்த்திய சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டநாயகன் விருதை பெற்றபின் பேசிய சுரேஷ் ரெய்னா,  “டி.20 போட்டிகளை பொறுத்த வரை முதல் ஆறு ஓவர்களே மிக முக்கியம். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் முதல் பந்தையே கூட சிக்ஸருக்கு தான் அடிக்க வேண்டும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரையில் நாம் பொறுமையாக விளையாடலாம் ஆனால் டி.20 போட்டிகள் அப்படி இல்லை.

Suresh Raina of India during the 2nd T20i between South Africa and India held at SuperSport Park in Centurion on the 21st Feb 2018
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS

இந்த தொடரின் வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் கூட காரணம். அவர்களே எங்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையை கொடுத்து ஊக்கம் அளித்தனர். போட்டியின் 7வது ஓவரை இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நான் வீசியது எனக்கு அதிகப்படியான மன உறுதியை கொடுத்தது. இனி வரும் காலங்களில் பந்துவீச்சிலும் கவனம் செலுத்த உள்ளேன், அதை வரும் தொடர்ந்து அனைவரும் பார்ப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த போட்டி குறித்து தொடர் நாயகன் விருது வென்ற புவனேஷ்வர் குமார் கூறியதை அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்; 

mujahith

......?

Loading Posts...