Loading Posts...

ஏன் இந்த ஏமாற்று வேலை – இலங்கை வீர்ரகள் கற்க வேண்டிய பாடம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எப்படியோ பெரிய சர்ச்சைகள் இல்லாமல் முடிந்துவிட்டது. முத்த டெஸ்ட் போட்டி மழை மற்றும் வெளிச்சமின்மையால் பாதிக்கபட்டாலும் ட்ராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அற்புதமாக விளையாடடி வெற்றி பெற்றது.

 

இந்நிலையில், மூன்றாவது டெஸ்டில் மீண்டுமொரு சர்ச்சை உருவாகிற நிலை ஏற்பட்டுள்ளது.

 

இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது மைதானப் பகுதியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்த இலங்கை அணியினர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர். இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது மைதானப் பகுதியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்த இலங்கை அணியினர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர்.

 

126-ஆவது ஓவரை வீசிய சுரங்கா லக்மல், 5 பந்துகளை வீசிவிட்டு களத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து மேத்யூஸ், கேப்டன் சண்டிமல், நடுவர்கள், இலங்கை அணி மேலாளர் அசன்கா குருசின்ஹா, இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஒன்று கூடி கலந்தாலோசித்தனர்.

 

பின்னர் அந்த ஓவரை தில்ருவன் பெரேரா முடித்து வைத்தார். எனினும், அடுத்த ஓவர் வீசும்போதே இலங்கை அணியில் 10 வீரர்கள் மட்டுமே களத்தில் இருப்பதாகக் கூறி ஆட்டத்தை நிறுத்தினார் சண்டிமல். இதையடுத்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கோலி அறிவித்தார்.

 

முன்னதாக, மோசமான காற்றுத் தரம் காரணமாக இலங்கை வீரர் லாஹிரு கமகே மூச்சுவிட சிரமப்பட்டதும், மைதானத்தில் வெளிச்சம் குறைந்து காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

மோசமான காற்றுத் தரம் காரணமாக இலங்கை வீரர் லக்மலுக்கு இன்று மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. 5-வது ஓவரை லக்மல் வீசிய பிறகு அவரால் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. மைதானத்திலேயே அவர் வாந்தி எடுத்தார். இதையடுத்து அவர் மைதானத்திலிருந்து வெளியேறி வீரர்களின் ஓய்வறைக்குச் சென்றார். இலங்கை வீரர்கள் பலரும் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் தற்போது விளையாடிவருகிறார்கள். பிறகு 10-வது ஓவரின்போது மீண்டும் களமிறங்கிய லக்மல், உடனடியாக தனது பந்துவீச்சைத் தொடர்ந்தார்.

 

இன்றும் இதே சர்ச்சை தொடர்ந்ததால், இன்று ஆட்ட நேர முடிவில் இலங்கை வீரர்களுக்கு ஆக்சிஜன் டெஸ்ட் வைக்கப்பட்டது.பரிசோதனைக்கு சென்றனர். டிக்வெல்லா, டி சில்வா மற்றும் சண்டகண் ஆகியோருக்கு பல்ஸ் மற்றும் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்தனர், மூவருக்கும் 99, 98 மற்றும் 99 என்று இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதன் பிறகு அவர்கள் மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்கள். போட்டியின் போது வாந்தி எடுத்த சுரங்கா லக்மலும் பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார். ஏன் இப்படி சரியாக செய்யும் அதிகாரப்பூர்வ சோதனைக்கு மறுக்க வேண்டும். அவர்கள் செய்தது உண்மை என்றால், சோதனைக்கு செக்க வேண்டியது தானே?

 

இப்படியாக தேவையில்லாத யுக்தியால் இலங்கை அணி காலம் காலமாக கிரிக்கெட் போட்டியை சற்று கீழ் கொண்டு செல்கின்றனர் என்பது தான் சாதாரண ரசிகனின் மனக்குமுரல்.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...