Loading Posts...

நான் ஒன்றும் ரோபோ இல்லை – கிழித்தால் எனக்கும் ரத்தம் வரும், ஓய்வு பற்றி விராட் கோலி

Pune: Indian captain Virat Kohli addresses a press conference ahead of the 1st ODI match between India and England at Maharashtra Cricket Association Stadium, Pune on Jan 14, 2017. (Photo: Surjeet Yadav/IANS)

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று(நவ்.16) கொல்கத்தவில் துவங்குகிறது. இந்த போட்டிக்கான இரு வீரர்களும் கடந்த சில நாட்களாக கடினமாக வலைப்பயிற்சி செய்தனர்.

இதுவரை இலங்கை அணி வரலாற்றிலேயே இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டி கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா வந்துள்ள இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் மற்றும் சுழற்ப்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் ஆகியோர், இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டி வெல்லுவதே தங்களது நோக்கம் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர்களுக்கு நேற்று முன்தினம்(நவ்.14) பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் பலவற்றைப் பேசினார், அவர் கூறியதாவது

இந்தியாவிற்க்காக விளையாடும் போட்டி ஒவ்வொன்றும் முக்கியம் தான், ஒவ்வொரு தொடரும் முக்கியம் தான். ஒரு அணியாக எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்க்க முயல்கிறோம்.

எனக் கூறினர் விராட் கோலி.

இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் எனக் கேட்ட போது அவர் கூறியதவாது,

ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூல்நிலையைப் பொருத்து தான் கூற முடியும். எங்க ஆடினாலும் யாருடன் ஆடினால் வெற்றி பெருவதே எங்கள் நோக்கம். தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் இது தான் எங்களது வேலை.

எனக் கூறினார் கேப்டன் விராட் கோலி.

தொடருக்கு முன் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்ட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது

இது பற்றி சரியான ஒரு விளக்கம் இதுவரை இல்லை. வேளைப்பழுவைப் பற்றி நிறைய பேசுகிறோம். அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமா இல்லை வேண்டாம என்பது பற்றியும் நிறைய பேசுகிறோம். எடுத்தக்காட்டாக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒரு வருடத்திற்கு 40 போட்டிகள் விளையாடுகின்றனர்.

அப்படி அதிகமாக விளையாடுபவர்கள் அணியில் 3 பேர் உள்ளனர், ஒன்று அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட வேண்டும், அல்லது சுழற்சி மூறையில் வீரர்களிய விளையாட வைக்க வேண்டும். அணியில் 11 வீரர்கள் விளையாடுகின்றனர், ஆனால், எல்லோருமே ஒரு போட்டியி 45 ஓவர்கள் பேட்டிங் பிடிப்பதோ அல்லது டெஸ்ட் அப்போட்டியில் 30 ஓவர்கள் வீசுவதோ கிடையாது. ஆனால், கிட்டத்தட்ட தொடர்ச்சியாக இப்படி ஆடுபவர்களுக்கு நாம் கை கொடுக்க வேண்டும்.

எனக் கூறினார் கோலி

மேலும், அவருக்கு ஓய்வு வேண்டுமா எனக் கேட்டபோது, அவர் கூறியதாவது

கண்டிப்பாக எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஏன் எனக்கு ஓய்வு தேவைப்படாது? பொருத்திருந்த பார்த்தால் என்னுடைய உடம்பும் ஓய்வு கேட்க்கத்தான் செய்கிறது. சரியாக என் உடம்பு ஓய்வு கேட்டால், நான் அதனை கேட்டு பெற்றுக்கொள்வேன். நான் ஒன்றும் ரோபாட் இல்லை. கத்தியை வைத்து எனது உடம்பி கீறினால் எனக்கு ரத்தம் வரும்.

எனக் கூறினார் விராட் கோலி.

விராட் கோலி தொடர்ச்சியாக அவர் கேப்டன் ஆனதில் இருந்து இந்திய அணியின் அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார் அவர் கூறியதை விட இந்திய அணி இந்த வருடத்தில் மட்டும் 40க்கும் மேற்ப்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளது.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...