Loading Posts...

ரஞ்சிக் கோப்பை இந்த வருட போட்டிகள், புள்ளி விவரங்கள்

இந்த வருட ரஞ்சிக் கோப்பைத் தொடர் கோப்பை தொடர் அக்டோபர் 6ஆம் தேதி துவங்கி வரும் ஜனவர் மாதம் 2ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த வருட தொடர் இந்தியாவின் 84ஆவது ரஞ்சிக் கோப்பைத் தொடராகும். மேலும், ரஞ்சிக் கோப்பைத் தொடர் தான் இந்தியாவின் முக்கிய முதல் தரப் போட்டியாகும் இந்த தொடரில் வீரர்கள் காட்டும் செயல்பாட்டை வைத்தே வைத்தே இந்திய அணிக்காக வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படித்தான் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்கள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னர் வரை வித்யாசமாக பிரிவுகள் பிரித்து விளையாடப்பட்டு வந்தது. ஆனால், இந்த வருடம் சரியாக 4 பிரிவுகள் பிரித்து ஒவ்வொரு பிரிவிஏகும் எட்டு அணிகள் என மொத்தம் 28 அணிகள் கநலந்து கொண்டு ஆடி வருகிறது. இந்த ஐடியா முன்னாள் வீரர் சேவாக் கொடுத்த ஐடியா ஆகும்

அணிகளின் பிரிவுகள் விவரம்

A பிரிவு : கர்நாடகா, டெல்லி, ரெயில்வேஸ், மஹராஸ்ட்ரா, ஹதராபாத், உத்திர பிரதேசம், அசாம்

B பிரிவு : சௌராஸ்டிரா, குஜராத், கேரளா, ஜம்மு அன்ட் காஷ்மீர், ஜார்கன்ட், ராஜஸ்தான், ஹரியானா

C பிரிவு : ஆந்திரா, மத்திய பிரதேசம், மும்பை, தமிழ்நாடு, பரோடா, ஓடிஷா, திரிபுரா

D பிரிவு :விதர்பா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், வங்காளம், சட்டிஸ்கர், கோவா, சர்வீசஸ்

தற்போது அனைத்து அணிகளும் மிகத் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றன. ஒவ்வொரு அணியின் தன் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு மூறை மோதும். லீக் சுற்றில் இப்படி மொத்தம் 6 போட்டிகள் நடக்கும். தற்போது ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 4 போட்டிகளில் விளையாடி விட்டது. அடுத்த சுற்று இன்னும் சில தினங்களில் தத்தம் மைதானங்களில் நடைபெறும்.

தற்போது வரை அனைத்து அணி வீரர்களும் முழு மூச்சாக ஆடி வருகின்றனர். அதிக ரன் அடித்தவர்கள் பட்டியளில் ஆந்திராவின் வீரர் ஹனுமா விகாரி முதலிடத்தில் உள்ளார்.

மொத்தம் 5 போட்டிகளில் 8 ஆட்டத்தில் ஆடியுள்ள அவர், இமாலயமாக 111.67 சராசயில் 667 ரன் குவித்துள்ளார். இரண்டாவது இடத்த்தில் 26 வயதான கர்நாடகா அணியின் மயான்க் அகர்வால் உள்ளார். அவர் 4 போட்டீய்ல் 6 ஆட்டத்டில் 106.80 சராசரியில் 534 ரன் அடித்துள்ளார். ஆனால், அதிக பட்ச சராசரியை 19 வயதான அன்மோல் ப்ரீத் சிங் வைத்துள்ளார். அவர் மொத்தம் 3 ஆட்டத்தில் 430 ரன் குவித்துள்ளார். இதன் சராசரி 143.33 ஆகும். மேலும், இந்த 3 ஆட்டத்தில் ஒரு அரை சதம், ஒரு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் ஆகியவை அடங்கும். இதனால் இவர் சமீபத்தில் நடந்த இலங்கயுடனான் பயிற்சி ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 30 வயதான மத்திய பிரதேசத்தின் ஆல் ரவுண்டர் முதலிடத்தில் உள்ளார். அவர் 4 போட்டியில் வெறும் 13.86 சராசரியில் தற்போது வரை 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் ஜம்மு காஷ்மிர் கேப்டன் மற்றும் ஆல் ரவுண்டர் பர்வேஸ் ரசூல் உள்ளார். இவர் 26.70 சராசரியில் 27 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

சென்ற வருட ரஞ்சிக் கோப்பைத் தொடரை வென்ற குஜராத் அணி, பி பிரிவில் 4 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. சி பிரிவில் உள்ள தமிழக அணி 4 போட்டிகளில் அனைதையும் ட்ரா செய்து 4ஆவது இடத்தில் உள்ளது.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...