Loading Posts...

இது எனது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்; ஷிகர் தவான் !!

LONDON, ENGLAND - JUNE 08: Shikhar Dhawan of India reacts to the crowd as he leaves the field after being dismissed during the ICC Champions trophy cricket match between India and Sri Lanka at The Oval in London on June 8, 2017 (Photo by Clive Rose/Getty Images)

இது எனது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்; ஷிகர் தவான்

இந்திய அணியில் தனது சம்பளம் 1300% உயர்த்தப்பட்டது தனக்கு சிறந்த ஆட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலையும், வீரர்களுக்கான சம்பளத்தையும் சமீபத்தில் பி.சி.சி.ஐ., வெளியிட்டது.

அதில், புதிதாக “ஏ+” என்னும் பிரிவை உருவாக்கி, அதில் கோஹ்லி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, பும்ராஹ் மற்றும் புவனேஷ் குமாரை சேர்த்து அவர்களுக்கு சம்பளமாக 7 கோடி ரூபாயை நிர்ணயித்தது.

இதில் கடந்த வருட ஒப்பந்த பட்டியலில் சி கிரேட்டில் இருந்த ஷிகர் தவானின் சம்பளம் ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 1300 விழுக்காடு அதிகரித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தனது ஒரு வருட கால சிறப்பானா ஆட்டத்திற்கும் தனது கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் தான் இந்த சம்பள உயர்வு என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து என்.டி.டி.வி நடத்திய நேர்கனில் ஒன்றில் ஷிகர் தவான் கூறியதாவது, சமீபத்திய தொடர்கள் அனைத்திலும் நான் சிறப்பாக விளையாடியதாகவே நினைக்கிறேன். அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்து விளங்கியதன் காரணமாகவே சி கிரேட்டில் இருந்து ஏ+ கிரேடிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

LONDON, ENGLAND – JUNE 08: Shikhar Dhawan of India reacts to the crowd as he leaves the field after being dismissed during the ICC Champions trophy cricket match between India and Sri Lanka at The Oval in London on June 8, 2017 (Photo by Clive Rose/Getty Images)

அந்த நேர்கானலில் ஷிகர் தவானிடம் கேட்கப்பட்ட மேலும் சில கேள்விகளும், அதற்கான பதில்களும்;

கேள்வி; தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரில் நீங்கள் அபாரமாக விளையாடினீர்கள், கோஹ்லியை விட நீங்கள் சிறந்த வீரர் என்று நினைக்கிறீர்களா..?

பதில்; ஒவ்வொரு வீரர்களும் தனித்துவம் மிக்கவர்கள், ஒருவரை மற்றொருவடன் ஒப்பிடக்கூடாது.

கேள்வி; தென் ஆப்ரிக்கா சென்று வெற்றியுடன் நாடு திரும்பிய போது இந்திய வீரர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது..?

பதில்; தென் ஆப்ரிக்கா மண்ணில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம், அதன் காரணமாகவே எங்களுக்கு வெற்றியும் கிடைத்தது. தென் ஆப்ரிக்கா மண்ணிலேயே தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியதை நினைத்தால் பெருமையாகவும் உள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...