Loading Posts...

இரண்டாவது டி.20 போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது  இந்தியா !!

இரண்டாவது டி.20 போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது  இந்தியா

இந்திய  அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அனி 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

இதனையடுத்து இரு அணிகள் இடையேயான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரி முதல் போட்டியில் வெற்றி பெற்று டி.20 தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் துவங்கிய நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா  அணியின் கேப்டன் டுமினி முதலில்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் பும்ராஹ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷர்துல் தாகூர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆனால் தென் ஆப்ரிக்கா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண்கின்றனர்.

இந்திய அணி;

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி, புவனேஷ்வர் குமார், உனாட்கட், சாஹல், ஷர்துல் தாகூர்.

தென் ஆப்ரிக்கா அணி;

ஸ்மட்ஸ், ரீசா ஹென்ரிக்ஸ், டுமின், டேவிட் மில்லர், ஃபர்கான் பெஹர்தீன், ஹென்ரிச் க்ளேசன், கிறிஸ் மோரிஸ், அண்டில் பெலேகுயோ, டேன் படெர்சன், ஜூனியர் டலா, தர்பரேஷ் சம்சி

mujahith

......?

Show one comment

February 21, 2018
0

This time kozhi dhoni rohit raina best performance of the drama

Leave a Comment

Loading Posts...