Loading Posts...

இங்கிலாந்தை சமாளிப்பதற்காக ஜூன் மாதமே இங்கிலாந்து செல்கிறது இந்தியா !!

இங்கிலாந்தை சமாளிப்பதற்காக ஜூன் மாதமே இங்கிலாந்து செல்கிறது இந்தியா

ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ள இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் சிலர் ஜூன் மாதமே இங்கிலாந்து செல்ல உள்ளதாக பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கொடி கட்டி பறந்து வரும் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐ.பி.எல் தொடருக்கு பிறகு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.

Captain Virat Kohli raise the bat and acknowledge the crowd after he was out for 235 runs going to pavlion against England on the 4th Day play at wankhade stadium. 

அண்ணிய மண்ணில் இந்திய அணியால் வெற்றி பெற முடியாது என்ற கருத்தை, சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய அணி உடைத்திருந்தாலும், இங்கிலாந்து அணியுடனான தொடர் நிச்சயம் இந்திய வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியுடனான கடந்த தொடர்களில் இந்திய வீரர்கள் மோசமான செயல்பட்டுள்ளதால், கோஹ்லி உள்பட இந்திய வீரர்கள் சிலரை இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வைக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

இந்திய கேப்டன் கோஹ்லி, கவுண்டி கிரிக்கெட் சர்ரே அணிக்காக விளையாட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் கோஹ்லி மட்டுமல்லாமல் மேலும் சில இந்திய வீரர்களை கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வைக்க திட்டமிட்டுள்ளதாக பி.சி.சி.ஐ, தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வினோத் ராய் கூறியதாவது,  கோஹ்லி மட்டுமல்லாமல் அவருடன் சேர்த்து மேலும் நான்கு இந்திய வீரர்களை கவுண்டி கிரிக்கெட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறோம். இது குறித்து பி.சி.சி.ஐ.,யின் ஆலோசனை  குழுவின் ஆலோசனையையும் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ள இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களில், முரளி விஜய் உள்பட சிலர் ஜூன் மாதமே இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், அங்கு அவர்கள் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றில் பங்கேற்க உள்ளதாகவும் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் இந்திய ஏ அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய வீரருமான ராகுல் டிராவிட்டும் இங்கிலாந்து செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...