Loading Posts...

முதல் போட்டியிலேயே கிறிஸ் லின் விளையாடுவார்; கொல்கத்தா அணி நம்பிக்கை !!

முதல் போட்டியிலேயே கிறிஸ் லின் விளையாடுவார்; கொல்கத்தா அணி நம்பிக்கை

அடுத்த மாதம் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியிலேயே கிறிஸ் லின் மற்றும் ஆண்ட்ரியூ ரசல் கொல்கத்தா அணியில் விளையாடுவர் என்று கொல்கத்தா அணியின் CEO தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல் டி.20 தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட வீரர்களுக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின்னை இந்த முறையும் கொல்கத்தா அணியே 9.6 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

ஆனால், ஏலம் முடிந்த அடுத்த சில தினங்களில் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த கிறிஸ் லின், தொடரில் இருந்து விலகியதோடு, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார், மேலும் கொல்கத்தா அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஆண்ட்ரியூ ரசலும் சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் ஒன்றில் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ரசல் மற்றும் கிறிஸ் லின் இந்த தொடரில் விளையாடுவார்களா..? மாட்டார்களா..? என்ற கொல்கத்தா ரசிகர்கள் கவலையில் உள்ள நிலையில், இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்தே கிறிஸ் லின் மற்றும் ரசல் கொல்கத்தா அணியில் விளையாடுவார்கள் என்று கொல்கத்தா அணியின் CEO வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெங்கி மைசூர் பேசியதாவது, கிறிஸ் லின் மற்றும் ஆண்ட்ரியூ ரசல் 8ம் தேதி நடைபெற உள்ள கொல்கத்தா அணியின் முதல் போட்டியிலேயே விளையாடுவார்கள் என்று எதிர்பார்கிறோம்  என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனான தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய வெங்கி மைசூர், “முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் தினேஷ் கார்த்தின் ஆட்டம் அபாரமாக இருந்தது. தினேஷ் கார்த்திக் மிக சிறந்த வீரர். அவரின் ஆனுபவமும், ஆற்றலும் கொல்கத்தா அணிக்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...