Loading Posts...

சண்டை போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர் !!

சண்டை போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர்

தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது டி.காக்குடன் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர், மீண்டும் ரசிகர் ஒருவருடன் சண்டை போட்டு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைப்பெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா 311 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றது.

இந்த போட்டியின் 14 பந்தில் ஒரு சிக்ஸர் 5 பவுண்டரி விளாசி விரைவாக 30 ரன்னை சேர்த்த டேவிட் வார்னர் ரபாடா பந்தில் போல்டானார்.

வீடியோ;

இதையடுத்து பெவிலியன் திரும்பிய டேவிட் வார்னரை ஒரு ரசிகர் ஏதோ சொன்னதால், அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து மைதான பாதுகாவலர் சமாதானம் செய்ய வார்னர் கிளம்பினார்.

டி.காக்குடன் மோதல்;

தென் ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்ரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் டி.காக்குடன் டேவிட் வார்னர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், மற்ற வீரர்கள் தடுத்ததால் இருவரிடையே கை கலப்பு  ஏற்படமால் தவிர்க்கப்பட்டது.

டி.காக்கை டேவிட் வார்னர் அடிக்க பாந்த வீடியோ வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டேவிட் வார்னரின் சம்பளத்தில் இருந்து 75% சதவீதத்தை பிடித்தம் செய்து ஐ.சி.சி., உத்தரவிட்டிருந்தது.

 

mujahith

......?

Leave a Comment

Loading Posts...