Loading Posts...

ஸ்மித் இனி தேவையில்லை; கடுப்பான ஆஸ்திரேலிய அரசாங்கம் !!

ஸ்மித் இனி தேவையில்லை; கடுப்பான ஆஸ்திரேலிய அரசாங்கம்

ஸ்டீவ் ஸ்மித்தை நிரந்தமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் இடையே கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கேமிரான் பெங்கிராப்ட், மர்ம பொருள் ஒன்றை வைத்து பந்தை சேதப்படுத்தினார்.

பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.

ஸ்மித்திற்கு எதிராக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஸ்மித்தை நிர்ந்தமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்புல் கூறும்போது, ‘ தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த தகவல் அதிர்ச்சி யாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருமே, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற அவப்பெயர் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சேர்மன் டேவிட் பீவரிடம் பேசினேன். எனது ஏமாற்றத்தைக் கூறினேன். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...