Loading Posts...

ஐ.சி.சி சொல்லட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்; ராஜிவ் சுக்லா !!

ஐ.சி.சி சொல்லட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்; ராஜிவ் சுக்லா

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐ.சி.சி., எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பிறகே ஸ்மித் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பாரா மாட்டாரா என்பது தெரியும் என்று ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் இடையேயான இந்த தொடர் துவக்கத்தில் இருந்தே டி.காக் – டேவிட் வார்னர் சண்டை, ராபாடாவின் வார்த்தை போர் என சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது.

டி.காக், வார்னர் மற்றும் ரபாடாவின் பிரச்சனையை ஐ.சி.சி., கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தீர்த்து வைத்த நிலையில், நேற்று ஆஸ்திரேலிய வீரரால் புதிய சர்ச்சை கிளம்பியது.

கேப்டவுனில் தற்போது நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான கேமிரான் பென்கிராப்ட் மர்ம பொருள் ஒன்றை வைத்து பந்தை சேதப்படுத்தியுள்ளார்.

பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.

இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதிலும் கேள்வி எழுந்தது. மேலும் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நீக்கியதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து ஐ.பி.எல் சேர்மன் ராஜிவ் சுக்லா கூறியதாவது, “பிசிசிஐ மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ தண்டனை அறிவிப்பிற்காக காத்திருக்கிறது. தற்போது வரை பிசிசிஐ-யோ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

ஐசிசியின் தண்டனையின் அளவைப் பொறுத்துதான் நாங்கள் முடிவு எடுப்போம். ஸ்மித் அந்த அணிக்கு முக்கியமானவர். அத்துடன் கேப்டனாகவும் உள்ளார். இதனால்தான் நாங்கள் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...