Loading Posts...

அசின் ஜஹானை இன்று சந்திக்கிறது பிசிசிஐ-யின் லஞ்ச ஒழிப்பு கழகம்

Cricket, Mohammed Shami, India,

சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் முகமது ஷமி பிக்சிங் செய்திருப்பார் என முகமது ஷமியின் மனைவி அசின் ஜஹான் தெரிவித்தார், இதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பிரச்சனையை ஆய்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்பு கழகம் இன்று கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் ஷமியின் மனைவியை சந்திக்கவுள்ளார்கள்.

பல பெண்களுடன் முகமது ஷமி தொடர்பு வைத்துள்ளார் என முகமது ஷமியின் மனைவி அசின் ஜஹான் கடந்த வாரம் தெரிவித்தார். மேலும், அவர் என்னையே ஏமாற்றும் போது அவர் நாட்டை கண்டிப்பாக ஏமாற்றுவார், அவர் பிக்சிங் செய்திருக்கிறார் என பரபரப்பு தகவல் அளித்தார் அசின் ஜஹான்.

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

மேலும், தன் கணவர் மீது கொல்கத்தாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் ஹாசன் ஜஹான். ஷமியின் மனைவியை துன்புறுத்தும் பெயரின் முகமது ஷமி பெயரில் வழக்கு பதிவு செய்தது போலீஸ்.

வீட்டில் துன்புறுவது மற்றும் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று மட்டும் இல்லாமல் அலிஸ்பா என்னும் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தினார் அசின் ஜஹான்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை இல்லை என தகர்த்து விட்டார் முகமது ஷமி. இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்க அவரது மனைவி செய்யும் திட்டம் எனவும் கூறினார். இதனால், கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் அவரது பெயரை சேர்க்கவில்லை இந்திய கிரிக்கெட் வாரியம்.

Cricket, Mohammed Shami, India,

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

இந்த பிரச்சனையை பற்றி விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்பு கழகம் முகமது ஷமியின் மனைவியிடம் விசாரிக்க செல்கிறது. ஷமி மீது சுமத்த பட்ட அனைத்து குற்றங்களுக்கும் சாட்சி இருக்கிறது என ஷமியின் மனைவி அசின் ஜஹானும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...