Loading Posts...

குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டியில் விளையாடவும் தகுதியானவரே ; பிராட் ஹாஜ் !!

குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டியில் விளையாடவும் தகுதியானவரே ; பிராட் ஹாஜ்

 குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் அளவிற்கு சிறப்பாக பந்துவீசுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு தனது சாதூர்யமான பந்துவீச்சு மூலம் கைகொடுத்த சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளார்.

Kuldeep Yadav of India reacts after a delivery during the 6th One Day International match between South Africa and India held at Supersport Park Cricket Ground in Centurion on the 16th Feb 2018
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS

 இந்நிலையில், குல்தீப் யாதவ்விற்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவரது பந்துவீச்சு ஆலோசகரும், ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரருமான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். பிராட் ஹாக் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளனர்.

 

இதுகுறித்து பிராட் ஹாக் கூறியதாவது:-

அவர் தயாராகிவிட்டார். ஒரு சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாக செயல்படுவார். அஷ்வின் மற்றும் ஜடேஜா இருக்கும் போது ஒரு முடிவெடுப்பது கடினம் தான், இருப்பினும் அஷ்வினை ஆல்-ரவுண்டராக விளையாட விட்டு, குல்தீப்பிற்கும் இந்திய அணியில் வாய்ப்பளித்தால் சிறப்பாக இருக்கும். மேலும் இந்திய அணிக்கு ஒரே ஒரு ஸ்பின்னர் தேவைப்படும் பட்சத்தில் அதற்கு அவர் தயாராக இருக்கிறார். அவர் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 வீரர் மட்டுமல்ல, மொத்தத்தில் ஒரு சிறந்த வீரர். அவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட விடுங்கள்

நான் அவரை 4 ஆண்டுகளுக்கு முன் பார்க்கும்போது, அவர் ஒரு சிறந்த இளம் வீரர் என்பதை உணர்ந்தேன். அவரிடம் கடின உழைப்பு, சொல்வதை கேட்கும் தன்மை, கேள்வி கேட்கும் திறமை ஆகியவை அதிகமாக உள்ளது. அவர் திறமை உடையவர், அவர் தொழில்நுட்ப ரீதியாக, தந்திரோபாய ரீதியாகவும் மனநிறைவுடனும் உள்ளார். அவர் எங்கே போக வேண்டும் என்பதை அவர் அறிவார். அவரது பலமும், பலவீனங்களும் அவருக்கு தெரியும், எந்த பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என்றார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...