Loading Posts...

பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலியா வீரர்… வீடியோவில் கையும் களவுமாக சிக்கி கொண்டார் !!

பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலியா வீரர்… வீடியோவில் கையும் களவுமாக சிக்கி கொண்டார்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமிரான் பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய வீடியோ வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் இடையேயான இந்த தொடர் துவக்கத்தில் இருந்தே டி.காக் – டேவிட் வார்னர் சண்டை, ராபாடாவின் வார்த்தை போர் என சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது.

டி.காக், வார்னர் மற்றும் ரபாடாவின் பிரச்சனையை ஐ.சி.சி., கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தீர்த்து வைத்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரரால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
கேப்டவுனில் தற்போது நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான கேமிரான் பென்கிராப்ட் மர்ம பொருள் ஒன்றை வைத்து பந்தை சேதப்படுத்தியுள்ளார்.

நடப்பு டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி கொண்டிருந்த போது கேமரூன் பேன்கிராஃப்ட் இடம் ஒரு முறை பந்து சென்ற போது அதை எடுத்து கையில் வைத்திருந்த ஏதோ மஞ்சள் நிற தகடு போன்ற பொருளை வைத்து பந்தை தேய்த்து சேதப்படுத்தினார்.

பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர் வைத்திருந்த மஞ்சள் நிற தகடு பேண்ட் பையிலிருந்து எடுத்து டவுசரில் வைக்கும் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.

வீடியோ;

கையில் மஞ்சள் கலரில் உள்ள மர்ம பொருள் ஒன்றை வைத்து கேமிரான் பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் வீடியோ வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் போட்டி முடிந்த பிறகு இவர் மீது ஐ.சி.சி.,யின் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...