Loading Posts...

மைதானத்திற்குள்  புகுந்து தோனியின் காலில் விழுந்த சென்னை ரசிகர் !!

மைதானத்தில்  புகுந்து தோனியின் காலில் விழுந்த சென்னை ரசிகர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி  பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழுந்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 10 சீசன் நடைபெற்றுள்ள நிலையில், ஐ.பி.எல்.,லின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பரம எதிரியான சம பலம் கொண்ட இரு அணிகளான மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

 

இரண்டு வருட தடை காலம் முடிந்து, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

பயிற்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த சென்னை வீரர்களும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி, நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மைதனத்திற்குள் புகுந்த சென்னை ரசிகர் ஒருவர் நேராக ஓடி வந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனியின் காலில் விழுந்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத தோனி, அவரை உடனடியாக தூக்கி விட்டார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...