Loading Posts...

இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம்; ரோஹித் சர்மா !!

Indian batsman Shikhar Dhawan in action during the 1st T20I cricket match against South Africa in Johannesburg, South Africa, Saturday Feb. 18, 2018. (AP Photo/Christiaan Kotze)

இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம்; ரோஹித் சர்மா

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி.20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி கேப்டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தவான் 47 ரன்களும், ரெய்னா 43 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் ம்டுவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 172 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நூழிலையில் வெற்றியை தவறவிட்டு, தொடரையும் இழந்தது.

இந்நிலையில் போட்டியின் முடிவை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது “உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த போட்டியில் தொடர்ந்து 15 ரன்கள் மட்டுமே  முன்னிலையில் இருந்ததால் வெற்றி  பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 172 என்பது நல்ல ஸ்கோர் தான் என்றாலும் இந்த வெற்றியை எங்களுக்கு எங்கள் பந்துவீச்சாளர்களே கொடுத்துள்ளார்கள். இரண்டாவது போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர், வரும் காலங்களில் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்த்து கொள்வோம். இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம். இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...