Loading Posts...

சென்னை என்பது வெறும் அணி இல்லை, ஒரு குடும்பம்; பிராவோ நெகிழ்ச்சி !!

சென்னை என்பது வெறும் அணி இல்லை, ஒரு குடும்பம்; பிராவோ நெகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் வெறும் அணி மட்டும் கிடையாது, அது ஒரு குடும்பம் என்று டுவைன் பிராவோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்  தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி  துவங்க உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில்  சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டு தற்போது மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த தொடருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக தோனி, ஹர்பஜன் சிங், பிராவோ உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் நேற்று சென்னை வந்தடைந்தனர். ஒவ்வொரு வீரருக்கும் மாலை அணிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வரவேற்பு அளித்தது.

சென்னை வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபடுவதோடு, பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சென்னையில் தன்னுடைய சக அணி வீரரான முரளி விஜய்யுடன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர் சென்னைக்கு மீண்டும் திரும்பியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பிராவோ, ”மிகவும் ஆவலாக இருக்கிறேன். சென்னைக்கு வருவது என்பது வீட்டுக்கு வருவதைப் போன்றது. கடந்த இரண்டு வருடங்களாக நான் இதை மிகவும் இழந்திருந்தேன். என் மீது நம்பிக்கை வைத்து அணியில் மீண்டும் பங்கேற்க வைத்த அணியின் நிர்வாகத்துக்கு நன்றி. சிறப்பாக விளையாடுவேன்.

கடந்த இரண்டு வருடங்களாக சென்னை ரசிகர்கள் வருத்தத்தில் இருந்ததை நான் அறிவேன். தற்போது திரும்பி வந்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி தந்துள்ளது. குறிப்பாக விஜய் மீண்டும் அணியில் இணைந்திருக்கிறார். போட்டிகளை எதிர் நோக்கி உள்ளோம்” என்றார் பிராவோ.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...