Loading Posts...

விண்டீஸ் அணிக்கு எதிரான உலக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் இயான் மார்கன் !!

SYDNEY, AUSTRALIA - JANUARY 21: Eoin Morgan of England is pictured before game three of the One Day International series between Australia and England at Sydney Cricket Ground on January 21, 2018 in Sydney, Australia. (Photo by Brook Mitchell/Getty Images)

விண்டீஸ் அணிக்கு எதிரான உலக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் இயான் மார்கன்

விண்டீஸ் அணிக்கு எதிரான உலக XI அணியின் கேப்டனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மார்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவில் உள்ள இம்ரா மற்றும் மரியா ஆகிய மைதானங்கள் கடந்த ஆண்டு சேதமடைந்தன. இதனை மீண்டும் சீரமிக்கும் முயற்சியில்  மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதற்கு ஐ.சி.சி.,யும் உதவி செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மே மாதம் வீண்டீஸ் அணிக்கும், உலக உலக XI (World XI)  இடையேயான கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி மே மாதம் 31ம் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இருந்து கிடைக்கும் பணத்தை இரு மைதானங்களின் சீரமைப்புக்கு செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான உலக XI அணியின் கேப்டனாக இங்கிலாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமான இயான் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது. உலக XI அணியில் இடம்பெறப்போகும் மற்ற வீரர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

SYDNEY, AUSTRALIA – JANUARY 21: Eoin Morgan of England is pictured before game three of the One Day International series between Australia and England at Sydney Cricket Ground on January 21, 2018 in Sydney, Australia. (Photo by Brook Mitchell/Getty Images)

இந்நிலையில் தான் உலக XI அணியின்  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயான் மோர்கன் கூறியதாவது, உலக XI அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம். இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களும் போட்டியை காண வந்து மேற்கிந்திய தீவில் உள்ள இரண்டு மைதானங்களை சீரமைக்க உதவுவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

mujahith

......?

Leave a Comment

Loading Posts...