Loading Posts...

குடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி !!

குடும்பத்திற்காக கவுண்டி கிரிக்கெட்டை உதறி தள்ளும் பெய்லி

குடும்பத்திற்காக வரலாற்று சிறப்புமிக்க கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடப் போவது இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பெய்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜார்ஜ பெய்லி, சமீப காலமாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் தனது குடும்பத்திற்காக  ஒவ்வொரு வீரர்களும் பெருமையாக உணரும் கவுண்டி கிரிக்கெட்டை புறக்கணிக்கபோவதாக பெய்லி அறிவித்துள்ளார்.

PERTH, AUSTRALIA – FEBRUARY 01: George Bailey of the Hurricanes watches a replay of his dismissal while walking from the field during the Big Bash League Semi Final match between the Perth Scorchers and the Hobart Hurricanes at Optus Stadium on February 1, 2018 in Perth, Australia. (Photo by Paul Kane/Getty Images)

இது குறித்து பெய்லி கூறியதாவது; கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். நான் சிறிது எனது நேரத்தை எனது குடும்பத்துடன் செலவழிக்க விரும்புகிறேன். இதன் காரணம் எதிர்வரும் வரலாற்று சிறப்புமிக்க கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன். நான் விரைவில் மீண்டும் அணிக்கு திரும்புவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் கவுண்டி கிரிக்கெட்டில் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நாயகனான புஜரா விளையாட உள்ளார்.

arrives at the 2018 Allan Border Medal at Crown Palladium on February 12, 2018 in Melbourne, Australia.

இதற்காக ஏப்ரல் மாதம் இங்கிலாந்து செல்லும் புஜாரா “ஜுன் 14-18-ல் இந்தியாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக இந்தியா திரும்பும் புஜாரா மீண்டும் ஜுன் 20 முதல் நடைபெறும் கவுன்டி போட்டிகளில் கலந்துகொள்கிறார். அதன்பின்பு ஆகஸ்ட் 1 முதல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் புஜாரா பங்கேற்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தபிறகும் யார்க்‌ஷையர் அணிக்காக கவுன்டி போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.  இதே போல் நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேன் வில்லியம்சனும் இதே அணிக்காக விளையாட உள்ளார்.

 

mujahith

......?

Leave a Comment

Loading Posts...