Loading Posts...

என்ன இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப தப்பு; சஞ்சய் மஞ்ரேக்கர் வேதனை !

Dinesh Karthik of India bats during the 2nd One Day International match between India and New Zealand held at the Maharashtra Cricket Association Stadium in Pune on 25th October 2017 Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

என்ன இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப தப்பு; சஞ்சய் மஞ்ரேக்கர் வேதனை

இந்திய கிரிக்கெட் அணியில் சாஹா மற்றும் பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டு வருவது தவறான செயல் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்குள் தோனி கால் வைத்த அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை ஏறத்தாழ 10 வருடங்களாக வேறு எந்த விக்கெட் கீப்பரும் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் விளையாடுவதை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையே நீடித்து வருகிறது.

Dinesh Karthik (C) dives for the ball during a training session on the eve of the first day of the third Test against South Africa on January 23, 2018 in Johannesburg. / AFP PHOTO / CHRISTIAAN KOTZE (Photo credit should read CHRISTIAAN KOTZE/AFP/Getty Images)

எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு தனது பங்களிப்பை சரியாக செய்து வருவதாலேயே சாஹா, பார்தீவ் பட்டேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எடுத்து கொண்டாலும் மற்ற வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நீண்ட காலமாக தவித்து வருவது நிச்சயம் வேதனையான விசயம் தான்.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர், இது வேதனை தரக்குடிய செயல் என்ற தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரை வெற்றி கரமாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி.20 தொடரில் பங்கேற்கிறது.

Rishab Pant of Delhi made 308 runs runs against Maharashtra Ranji Trophy Match at Wankhede Stadium in Mumbai but Pants 308 in vain as Delhi concede first innings lead- Photo by Prakash Parsekar

நாளை துவங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த தொடர் குறித்து பேசிய சஞ்சய் மஞ்ரேக்கர், முத்தரப்பு தொடரில் இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு விக்கெட் கீப்பராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு போட்டியில் நன்றாக விளையாடி அடுத்த போட்டியிலேயே மீண்டும் சொதப்பும் மணிஷ் பாண்டே தனது பேட்டிங்கில் முன்னேற்றத்தை கொண்டு வந்து இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை கெட்டியாக பிடித்து கொள்ள முயற்சிக்க வேண்டும், குறிப்பாக இந்த தொடரை அவர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...