Loading Posts...

வாழ்க தமிழ்நாடு… தமிழில் டீவிட் போட்டு மாஸ் காட்டும் ஹர்பஜன் சிங் !!

வாழ்க தமிழ்நாடு… தமிழில் டீவிட் போட்டு மாஸ் காட்டும் ஹர்பஜன் சிங்

ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தமிழ் மொழியிலேயே ட்வீட் போட்டு மாஸ் காட்டி வருகிறார்.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார்.

சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்ட உடனே ஹர்பஜன் சிங் தனது மகிழ்ச்சியை வெளிகாட்டும் வகையில் டுவிட்டரில் தமிழில் ஒரு பதிவு செய்திருந்தார். இந்நிலையில், ஹர்பஜன் சிங் நேற்று சென்னை வந்துள்ளார். அவருக்கு சென்னை சூப்பர் கிக்ஸ் அணி சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்விட்டில், நான் வந்துட்டேன்னு சொல்லு தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, “வீரமா“, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட() போறத நெனச்சாலேமெர்சலாகுதுதாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!”  என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் இந்த ட்வீட் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போல் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தனது ஜெர்சியையும், தனது ஜெர்சி நம்பரையும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...