Loading Posts...

ஜஸ்ட் மிஸ்சு!! இல்லன இன்னேரம் கவுன்ட்டி கிரிகெட் ஆட போயிருப்பேன்!

ஐபிஎல் ஏலத்தில் முதல் நாள் என்னை யாரும் எடுக்காதபோது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட பேசினார்கள் என்று முரளி விஜய் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ள முரளி விஜய், சென்னையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை அணிக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பையுடன் மோதும் தொடக்க நாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எனக்கு அதிகமான நினைவுகள் இருக்கின்றன. எனது சொந்த மாநில அணிக்கு திரும்பியிருப்பது பெருமையான விஷயம். இதற்கு முன் மற்ற அணிகளில் விளையாடி இருக்கிறேன். அந்த அணிகளுடன் இதை ஒப்பிடுவது சரியாக இருக்காது.

முதல் நாள் ஐபிஎல் ஏலத்தில் நான் எடுக்கப்படாதபோது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட என்னிடம் பேசினார்கள். அதற்குள் மறுநாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, என்னை ஏலத்தில் எடுத்ததும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். வெளிநாட்டு வீரர்கள் உள்ளூர் வீரர்கள் இணைந்து குடும்பம் போல இணைந்து ஆடுவது சிறப்பான விஷயம். இந்த போட்டி தொடரில் நன்றாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்திய அணியில் இப்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறேன். அனைத்து வித போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். டி20 போட்டியிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். இந்திய அணி, தென்னாப்பிரிக்கா சென்ற போது சிறப்பாக செயல்பட்டது. இருந்தும் டெஸ்ட் போட்டியில் தோற்றது துரதிர்ஷ்டமானது. நமது பந்துவீச்சாளர்கள் அங்கு சிறப்பாக செயல்பட்டார்கள். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டு வந்தோம்.
இவ்வாறு முரளி விஜய் கூறினார்.

”ஐ.பி.எல்., தொடரில், சொந்த வீடான சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி தருகிறது,” என, முரளி விஜய் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடரின் 11வது சீசன் வரும் ஏப்., 7ல் மும்பையில் துவங்குகிறது. இரு ஆண்டு தடைக்குப் பின், தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை அணி, முதல் போட்டியில் மும்பையை அதன் சொந்தமண்ணில் சந்திக்கவுள்ளது.

இதனிடையே, சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முரளி விஜய் கூறியது:

வீரர்கள் ஏலத்தில் முதல் நாள் யாரும் என்னை வாங்கவில்லை. இதையடுத்து, பலர் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தனர். நல்லவேளையாக இரண்டாவது நாளில், சென்னை அணியால் தேர்வு செய்யப்பட்டேன். 2009-13க்குப் பின், மீண்டும் இங்கு வந்தது, எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. உண்மையில் இது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.murali vijay csk க்கான பட முடிவு

‘டுவென்டி-20’ போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளேன். வரும் தொடரில் நன்கு திறமை வெளிப்படுத்தி, நமது அணியை வெற்றி பெறச் செய்வது, கூடுதல் உற்சாகம் தரும்.

மறக்க முடியுமா

சென்னை அணியுடன், எனக்கு மறக்க முடியாத பல நினைவுகள் உள்ளன. மும்பை அணியை அதன் சொந்தமண்ணில் வீழ்த்தியது என்றும் நினைவில் நிற்கும். இதுபோன்று, இந்த ஆண்டும் பல நினைவுகளை ஏற்படுத்த விரும்புகிறேன். இதனால், மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை பெரிதும், எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

எங்கள் நிர்வாகத்தின் செயல்கள் ஒவ்வொன்றும், வீரர்கள் மற்றும் அணியின் நலனுக்காகவே இருக்கும். உள்ளூர், அன்னிய வீரர்களை ஒருங்கிணைந்து, சிறப்பாக செயல்படுவர். இதை இந்த ஆண்டும் தொடர விரும்புகிறோம்.

ஒப்பிட முடியாதுmurali vijay csk க்கான பட முடிவு

சொந்தமண்ணில் நமது சென்னை அணிக்காக விளையாடவுள்ளது பெருமையாக உள்ளது. சென்னை அணியை மற்ற அணிகளுடன் ஒப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில், இங்கு உள்ளூர், அன்னிய வீரர்கள் இணைந்து ஒரு குடும்பத்தினர் போல செயல்படுவர். இது போன்ற அனுபவங்களை மற்ற அணிகளில் கண்டது இல்லை. இம்முறையும் இணைந்து சாதிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு முரளி விஜய் கூறினார்.

தாய் வீடு

‘ஆல் ரவுண்டர்’ பிராவோ கூறுகையில்,” ஏலத்தின் போது ஆஸ்திரேலியாவில் இருந்தேன். கடந்த இரு ஆண்டுகளாக சென்னை அணி இல்லாத நிலையில், மீண்டும் நமது அணியில் இடம் பெற வேண்டும் என, பிரார்த்தனை செய்தேன். ஒருவழியாக சென்னைக்கு தேர்வானது, தாய் வீட்டுக்கு வந்தது போல உள்ளது. உலகின் சிறந்த கேப்டன் தோனி, சென்னையை வழி நடத்துகிறார். வாட்சன், ஜடேஜா என, பல ‘சீனியர்கள்’ அணியில் இருப்பதால், எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை, ” என்றார்.

Mahat

Civil Engineer | Sports Freak | UPSC Aspirant

Leave a Comment

Loading Posts...