Loading Posts...

2019ம் ஆண்டு வரையாவது கிரிக்கெட் விளையாட விடுங்கள்; யுவராஜ் சிங் !!

2019ம் ஆண்டு வரையாவது கிரிக்கெட் விளையாட விடுங்கள்; யுவராஜ் சிங்

 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிக முக்கியமானவரான யுவராஜ் சிங், ஒரு காலத்தில் உலக கிரிக்கெட் அணிகளுக்கு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சிம்ம சொப்பமான விளங்கியவர்.

ஐ.பி.எல் தொடரிலும் இவருக்கான விலை ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த முறை பஞ்சாப் அணி மீண்டும் இவரை ஏலத்தில் எடுத்தது. இந்திய அணியில் இவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் இவர் விரைவில் ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தியும் அவ்வப்போது பரவும்.

BIRMINGHAM, ENGLAND – JUNE 04: Yuvraj Singh of India hits to the offside as wicketkeeper Sarfraz Ahmed looks on during the ICC Champions Trophy match between India and Pakistan at Edgbaston on June 4, 2017 in Birmingham, England. (Photo by Michael Steele/Getty Images)

 

இந்நிலையில் யுவராஜ் சிங், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

இது குறித்து இன்னும் சில காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதற்கான முழு உடல் தகுதியும், மன வலிமையும் என்னிடம் உள்ளதாக அறிகிறேன். தான் ஓய்வு பெற சரியான தருணம் இது தான் என்ற எண்ணம் எனக்கு வரும்போது நிச்சயம் நானாக ஓய்வு பெற்று விடுவேன். இன்னமும் ஒவ்வொரு போட்டியையும் நான் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். என்னதான் ஐ.பி.எல் உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் விளையாடினாலும் இந்திய அணிக்காக விளையாடுவது போல் வராது. இந்திய அணிக்காக விளையாடுவது எனக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும்.

MONACO – FEBRUARY 27: Yuvraj Singh attends the 2018 Laureus World Sports Awards at Salle des Etoiles, Sporting Monte-Carlo on February 27, 2018 in Monaco, Monaco. (Photo by Boris Streubel/Getty Images for Laureus)

கிரிக்கெட்டில் எனது பயணம் மிக சுவாரஸ்யமானது, பல இக்கட்டான நிலைகளை சந்தித்துள்ள நான், அதில் இருந்து கடும் போராட்டித்திற்கு பிறகே மீண்டு வந்துள்ளேன். கேன்சர் போன்ற கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்னும் நிறைய உதவிகள் செய்ய காத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

mujahith

......?

Leave a Comment

Loading Posts...