Loading Posts...

தட்ரோம்.. தூக்குறோம்.. தமிழில் மாஸ் டயலாக் பேசும் இம்ரான் தாஹிர் !!

தட்ரோம்.. தூக்குறோம்.. தமிழில் மாஸ் டயலாக் பேசும் இம்ரான் தாஹிர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கிலிஷீல் ட்வீட் செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் இரண்டு வாரத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பலம் வாய்ந்த சென்னை அணி 2வருட தடைக்கு பின்னர் மீண்டும் களமிறங்குகிறது.

தோனி தலைமையில் அணி களமிறங்குவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அணியின் வீரர்கள் தற்போது ஒவ்வொருவராக சென்னை வரத் துவங்கியுள்ளனர். ஏற்கெனவே தோனி, ஹர்பஜன், ஜடேஜா, ரெய்னா, முரளிவிஜய் போன்ற வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் விரைவில் அணியுடன் இணையவுள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், “என் இனிய தமிழ் மக்களே வணக்கம். சிங்கார சென்னைக்கு நாளை வந்தடைவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வர்றோம் தட்றோம் தூக்குறோம். எடுடா வண்டியா போடுடா விசில” என தங்கிலிஷீல்  பதிவிட்டுள்ளார். தற்போது சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள் தமிழில் டுவீட் செய்துவருகின்றனர். ஹர்பஜன் ஏலத்தில் எடுக்கப்பட்டதில் இருந்து சென்னை அணி குறித்த தனது கருத்துக்களை தமிழில் பதிவு செய்து வருகிறார். அதேபோல் தற்போது இம்ரான் தாஹிர் டுவீட் செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...