Loading Posts...

எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது; ரஹானே ஓபன் டாக் !!

எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது; ரஹானே ஓபன் டாக்

கிரிக்கெட் போட்டியின் போது எதிரணி வீரர்களை சண்டைக்கு இழுப்பது, கார் ஓட்டும் போது தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது போன்ற செயல்கள் தனக்கு சுத்தமாக பிடிக்காது என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரகானே. குறிப்பாக வெளிநாட்டு மண்ணிலும், வேகப்பந்து வீச்சு பந்திலும் அபாரமாக விளையாடக்கூடியவர். மும்பையில் மோட்டார் வாகனத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, ஹார்ன் ஒலிக்க வேண்டாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரகானே கலந்து கொண்டார்.

Pune: Ajinkya Rahane during a practice session ahead of the 2nd ODI cricket match against New Zealand, in Pune on Tuesday. PTI Photo by Shashank Parade (PTI10_24_2017_000133B)

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரகானே கூறுகையில் ‘‘நான் கிரிக்கெட் மைதானங்களில் ஸ்லெட்ஜிங்கை விரும்புவதில்லை. அதேபோல் டிரைவிங் செய்யும்போது கார் ஹார்ன்-ஐ ஒலிக்க விரும்புவதில்லை.

ஒலி மாசுபாடு மிகவும் தீவிரமான பிரச்சினை. குறிப்பாக மும்பையை போன்ற மெட்ரோ சிட்டியில் தீவிரமானது. ‘No Honking’ முயற்சியில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. என்னால் எவ்வளவு முடியுமோ அதை செய்வேன்’’ என்றார்.

ராஜஸ்தான் அணிக்கு கேப்டன்..?

ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக ஒட்டுமொத்த கிரிக்கெட்  உலகமும் போர்கொடி தூக்கியுள்ளதால் அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

இதன் எதிரொலியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...