Loading Posts...

புதிய கெட்டப்பில் மிரட்ட வருகிறார் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங் !!

Yuvraj Singh of Sunrisers Hyderabad celebrate the win during the final of the Vivo IPL 2016 ( Indian Premier League ) between The Royal Challengers Bangalore and the Sunrisers Hyderabad held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 29th May 2016 Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS

புதிய கெட்டப்பில் மிரட்ட வருகிறார் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங்

அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ள ஐ.பி.எல் டி.20 தொடரை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 10 சீசன் நடைபெற்றுள்ள நிலையில், ஐ.பி.எல்.,லின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பரம எதிரியான சம பலம் கொண்ட இரு அணிகளான மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

ஐ.பி.எல் தொடரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்தியதால், அதில் பங்கேற்கும் வீரர்களின் சேட்டைகளும் மிக  முக்கிய காரணம் என்று கூறலாம். வீரர்கள் தங்களது தலை முடியில் வித்தியாசமாக சாயம் பூசி கொள்வது, ஹேர்ஸ்டைலை விசித்திரமாக வைத்து கொள்வது என்று இவர்களின் சேட்டைக்கு ஒரு அளவில்லாமல் செல்லும்.

இந்த வருடத்திற்கான தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் சில வீரர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், இந்த வருடத்திற்கான பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டுள்ளவருமான யுவராஜ் சிங்கும் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார்.

பிரபல ஸ்டைலிஸ்டான ஹக்கிம் ஆலீம் தனக்கு முடி வெட்டும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் அதில், “எனது நீண்ட தலைமுடிவுக்கு ஒரு முடிவு கிடைத்து விட்டது என்றும் தனக்கு ஹேர்கட் செய்த ஹக்கீம் அலிமிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியதற்காக பஞ்சாப் அணியில் தனது சக வீரரான கே.எல் ராகுலிடம், யுவராஜ் சிங் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Great cut from the style master @aalimhakim ?

A post shared by Virat Kohli (@virat.kohli) on


அதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனுமாகிய விராட் கோஹ்லியும் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...