Loading Posts...

இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர் – இந்திய வீரர்களின் மார்க்

Cricket, India, Sri Lanka, Virat Kohli, Murali Vijay, Ishant Sharma

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் வென்றது. இலங்கை பேட்ஸ்மேன்களின் அசத்தலான பேட்டிங் திறமையால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது இந்தியா. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, 135.3 ஓவர்களில் 373 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 163 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 246-ஆக ஸ்கோர் இருந்தபோது, டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கோலி.

410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. பொறுப்பாக விளையாடிய இலங்கை அணி ஐந்தாவது நாள் முடிவில் ட்ரா செய்தது. இதனால், இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் வீரர்களுக்கான மார்க்கை பார்ப்போம்:

ஷிகர் தவான் (6/10)

இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டு அரைசதங்கள் உட்பட 192 ரன்கள் அடித்துள்ளார் தவான். ஆனால், தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க இந்த அரைசதங்களை சதங்களாக மாற்ற வேண்டும்.

முரளி விஜய் (8/10)

தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி, இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். மூன்று இன்னிங்சில் விளையாடி இருக்கும் அற்புதமாக விளையாடி 292 ரன் அடித்திருக்கிறார்.

லோகேஷ் ராகுல் (3/10)

முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய்க்கு பதிலாக அணியில் இடம் பிடித்த லோகேஷ் ராகுல், சிறப்பாக விளையாடவில்லை. இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது இடத்தை தவனுக்கு கொடுத்து விட்டார். 3 இன்னிங்சில் 86 ரன் மட்டுமே அடித்துள்ள அவர், அணியில் தொடர்ந்து விளையாட மேலும் சிறப்பாக விளையாடவேண்டும்.

செதேஸ்வர் புஜாரா (7/10)

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் செதேஸ்வர் புஜாரா இந்த டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து வீரர்களும் திணறிய போது, முக்கியமான நேரத்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அடுத்த வரும் தென்னாபிரிக்கா தொடரில் இவர் சிறப்பாக விளையாடினால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகிவிடும்.

விராட் கோலி (9.5/10)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெறி பார்மில் இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து பல சாதனைகளை படைத்தார். சொந்த மண்ணில் கலக்கி வரும் விராட் கோலி, தான் யாரென வெளிநாட்டிலும் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அஜிங்க்யா ரஹானே (2/10)

இந்தியா அணியின் நட்சத்திர வீரர் அஜிங்க்யா ரஹானே இந்த தொடரில் சொதப்பிவிட்டார். 6 இன்னிங்சில் விளையாடிய அஜிங்க்யா ரஹானே வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், அடுத்த முக்கியமான தொடருக்கு முன்பு இவர் நல்ல பார்முக்கு வரவேண்டும்.

ரோஹித் சர்மா (7.5/10)

பல மாதங்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ரோகித் சர்மா, தான் யாரென நிரூபித்து விட்டார். முக்கியமான நேரத்தில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து சதம், அரைசதம் என அடித்து அசத்தினார். இதனால், தென்னாபிரிக்கா தொடருக்கு இவர் இந்திய அணிக்கு உதவியாக இருப்பார்.

வ்ரிதிமான் சஹா (7/10)

மீண்டும் ஒரு முறையை தான் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என நிரூபித்து விட்டார் வ்ரிதிமான் சஹா. விக்கெட் கீப்பிங்கில் அசத்தி வரும் சஹா, முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு முக்கிய ஆட்டத்தை விளையாடினார். அவர் பேட்டிங் மீது மேலும் கவனம் செலுத்தினால், இந்திய அணிக்கு மேலும் பலம் அதிகரிக்கும்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (7/10)

முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார்.

ரவீந்திர ஜடேஜா (6/10)

முதல் டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக இவர் மாற்று அஸ்வின் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. ஆனால் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் சேர்த்து 10 விக்கெட்டுகள் எடுத்தார். இவர்கள் இருவரும் அடுத்த தொடருக்கு இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார்கள்.

புவனேஸ்வர் குமார் (8/10)

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஆனால், அதன் பிறகு அவருடைய திருமணம் காரணமாக அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

முகமது ஷமி (6.5/10)

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக ஷமி செயல்பட்டு வருகிறார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட் எடுத்திருக்கிறார். காயம் காரணமாக அவர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இஷாந்த் சர்மா (6/10)

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாட கிளம்பினார். ஷமிக்கு காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் முக்கியமான 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

உமேஷ் யாதவ் (4.5/10)

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்த டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் விளையாடிய இரண்டு போட்டிகளை ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். ஆனால், தென்னாபிரிக்கா தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார்.

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...