Loading Posts...

ஐபிஎல் துவக்கவிழாவில் 6 கேப்டன்கள் மட்டுமே கலந்துகொள்ள மாட்டார்கள்!! ஏன் தெரியுமா?

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி குறித்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா மும்பையில் நேற்று அளித்த பேட்டியில்,

தொடக்க விழாவில் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் ஒரு சேர விழா மேடையில் தோன்றமாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. தொடக்க விழா முடிந்த மறுநாளே 2 லீக் ஆட்டங்கள் இருப்பதால் சம்பந்தப்பட்ட அணிகளின் கேப்டன்கள் உடனடியாக போட்டி நடைபெறும் நகரங்களுக்கு திரும்புவது சிரமம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏப்ரல் 6-ந் தேதியே 8 அணிகளின் கேப்டன்கள் ஒன்று கூடி விளையாட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தொடக்க விழாவில் காண்பிக்கப்படும். தொடக்க விழாவில் முதல் ஆட்டத்தில் மோதும் (சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ்) இரண்டு அணிகளின் கேப்டன்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.Image result for ipl captain meet

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி மே மாதம் 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், தோனி (சென்னை), ரோகித் சர்மா (மும்பை) விராத் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ்), ஸ்டீவ் ஸ்மித் (ராஜஸ்தான் ராயல்ஸ்), காம்பீர் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), அஸ்வின் (பஞ்சாப்), டேவிட் வார்னர் (சன் ரைசர்ஸ்) ஆகிய கேப்டன்கள் தலைமையிலான எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டியில், இரண்டு வருடத்துக்குப் பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. வழக்கமாக தொடக்க விழா போட்டியில், 8 அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக விழா மேடையில் பங்கேற்பது வழக்கம். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. தொடக்க விழாவில், முதல் ஆட்டத்தில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.


தொடக்க விழா முடிந்த மறுநாளே 2 லீக் ஆட்டங்கள் இருப்பதால், அணிகளின் கேப்டன்கள் உடனடியாக போட்டி நடைபெறும் இடங்களுக்குத் திரும்புவது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஏப்ரல் 6 ஆம் தேதியே 8 அணிகளின் கேப்டன்கள் ஒன்றாகச் சேர்ந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தொடக்க விழாவில் திரையிடப்படும்.

Image result for ipl captain meet

‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை (டி.ஆர்.எஸ்) முதல் முறையாக நடைமுறைப்படுத்த படுகிறது. இதன்படி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைமுறையில் இருப்பது போல் ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் ஒரு முறை நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம். அந்த அப்பீல் வெற்றிகரமாக முடிந்தால் தொடர்ந்து அப்பீல் செய்ய முடியும். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் கூறிய சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நீரஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். அவரது விசாரணை அறிக்கைக்காக காத்து இருக்கிறோம். அவர் விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். அவரது அறிக்கை கிடைத்த பிறகு முடிவு எடுக்கப்படும். இந்த போட்டி தொடரில் பேட்டிங்கில் அதிரடியாக கலக்கி சிறந்த ‘ஸ்டிரைக் ரேட்’ வைக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...