Loading Posts...

சொந்த ஊர் நினைவுகளை பற்றி நெகிழ்ந்த கம்பிர்!!

சொந்த ஊர் நினைவுகளை பற்றி நெகிழ்ந்த கம்பிர்!!

இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு பதிலாக தன் ஊர் சொந்த அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆட போகிறார் கவுதம் கம்பிர். மேலும், அவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த ஊரில் தனது சிறு வயது நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார்.

நான் கிரிக்கெட் வீரர் என்பதால் எனக்கு பள்ளிக்கு செல்ல நேரம் கிடைக்காது. எப்போது ஆவது தஃன் பள்ளிக்கு செல்வேன்., ஆனால் அந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும். அந்த நாளில் ஒரு வகுப்பை கூட கட் அடிக்காமல் வகுப்பிற்கு சென்று விடுவேன். அது மிகவும் அழகான தருணம்.

என கூறினார் கம்பிர்.

Gautam Gambhir, IPL, KKR, DD

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் முதல் மூன்று சீசன்களில் கவுதம் கம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின்னர், கொல்கத்தா அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஏழு ஆண்டுகள் விளையாடினார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு, இரண்டு முறை கோப்பை வெல்வதற்கும் காரணமாக இருந்தார்.

 

delhi

 

இந்நிலையில், இந்த ஆண்டு கொல்கத்தா அணி கவுதம் கம்பீரைத் தக்கவைக்கவோ, ஏலத்தில் மீண்டும் எடுக்கவோ முயற்சி செய்யாத நிலையில், அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.2.8கோடி ஏலத்திற்கு எடுத்தது. இந்நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் செயல்படுவார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், ‘டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் தேர்வாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் டெல்லி அணிக்கு திரும்பவேண்டும் என்று நினைத்தேன். அணி அதை நிறைவேற்றியது. இந்தப் பொறுப்போடு என் விளையாட்டை மீண்டும் மீட்டெடுப்பேன் என்று நம்புகிறேன். தற்போது நம்மிடம் இருப்பது மிகச்சிறந்த வீரர்களைக் கொண்ட அணி’ என தெரிவித்துள்ளார்.

Gautam Gambhir

பிசிசிஐ , ஏப்ரல் 7ம் தேதி நடக்க இருக்கும் ஐபிஎல் துவக்க விழாவில் ரோஹித், தோனியை தவிர மற்ற 6 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ள அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களாக விராட் கோலி, அஷ்வின், கவுதம் கம்பிர், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முந்தைய நாளான 6ம் தேதி, ஸ்பெஷல் வீடியோ ஷூட்டில் கலந்து கொள்கின்றனர்.

Related image

இதனை தொடர்ந்து போட்டி நடக்க இருக்கும் ஏப்ரல் 7ம் தேதிக்கு முன்னதாக துவக்க விழா நடைபெறும். இதில் அன்று மோதும் மும்பை மற்றும் சிஎஸ்கே அணி கேப்டன்கள் ரோஹித் மற்றும் தோனி மட்டும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மற்ற 6 அணிகளின் கேப்டன்கள் துவக்க விழாவில் பங்கேற்க அவசியமில்லை என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

கடந்த ஐபிஎல் சீசன் வரை, அனைத்து அணி கேப்டன்களும் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொண்டு, ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ உறுதிமொழியை கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், இந்த முறை துவக்க விழாவுக்கு அடுத்த நாளில் நடக்க இருக்கும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான போதுமான கால அவகாசம் கேப்டன்களுக்கு இல்லாத காரணத்தினால்,விழாவில் மற்ற 6 கேப்டன்கள்  பங்கேற்பது அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...