Loading Posts...

ஐபில் 2018: இந்த 5 வீரர்களை கொல்கத்தா அணி தக்கவைத்து கொள்ளலாம்

Cricket, IPL, IPL 2018, KKR, Gautam Gambhir

அடுத்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலம் பரபரப்பாக இருக்கும். 2008-இல் நடந்த முதல் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தை விட இந்த ஏலம் பெரியதாக இருக்கும். இந்தியன் பிரீமியர் லீக் அணிகளுடன் பல வீரர்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. ஒரு அணி அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என முடிவு செய்தார்கள். இதனால், மற்ற வீரர்கள் அனைவரும் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் செல்வார்கள். இந்நிலையில், இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்த ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்வார்கள் என பார்க்கலாம்.

கவுதம் கம்பிர்

Cricket, IPL, IPL 2018, KKR, Gautam Gambhir

இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்திற்கு முன்பு ஒரு அணி ஒரு வீரரை மட்டுமே தக்கவைத்து கொள்ள வேண்டும் என தகவல் வந்தால், டெல்லியை சேர்ந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் கவுதம் கம்பிரை தக்கவைத்து கொள்வார்கள். 2011ஆம் சீசனில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வந்த பிறகு, அந்த அணிக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டது. முதல் மூன்று வருடமாக மோசமாக விளையாடிய அந்த அணி, கவுதம் கம்பிர் தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா அணி 2 முறை இந்தியன் பிரீமியர் லீக் தொடரை வென்றது மட்டும் இல்லாமல், சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதி போட்டிக்கும் கொல்கத்தா அணியை அழைத்து சென்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முன்னிருந்து வழிநடத்தி செல்லும் கவுதம் கம்பிர், அனைத்து சீசனிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த வருடம், கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல, தன்னுடைய சராசரி 41 வைத்து கொண்டிருந்தார் கேப்டன் கவுதம் கம்பிர்.

ராபின் உத்தப்பா

Cricket, IPL, IPL 2018, KKR, Gautam Gambhir

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இன்னொரு நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா தான். தொடக்கத்தில் மும்பை, பெங்களூரு, புனே அணிகளுக்காக விளையாடிய அவர், 2014ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியுடன் இணைந்தார்.

வந்த வருடமே தனது ரன் வேட்டையை தொடங்கினார். 2014ஆம் ஆண்டு ஐபில் தொடரில் 660 ரன் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்து ஒவ்வொரு தொடர்களிலும் கொல்கத்தா அணிக்காக 350 ரன்னுக்கு மேல் அடித்து வருகிறார். இந்த அணியின் பேட்டிங் பலத்தை அதிகரிக்க, இந்த அணி உத்தப்பாவை தக்கவைத்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

கிறிஸ் லின்

Cricket, IPL, IPL 2018, KKR, Gautam Gambhir

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் நான்கு வருடமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருக்கிறார். ஆனால் முதல் மூன்று வருஷம் அவருடைய திறமையை நிரூபிக்க அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு கடந்த ஆண்டு அவரை தொடக்கவீரராக பயன்படுத்தினார்கள், எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து குஜராத் அணிக்கு எதிராக 93 ரன் அடித்து அசத்தினார்.

முதல் இரண்டு போட்டியில் விளையாடிய பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இந்நிலையில், கடைசி கட்டத்தில் மீண்டும் வந்த லின் மீண்டும் சில சரவெடிகளை வெடித்தார். கடந்த ஆண்டு விளையாடிய 7 போட்டிகளில் 295 ரன் அடித்து பட்டையைக்கிளப்பினார். இதனால், இந்த அணி இவரை வெளியே விட வாய்ப்புகள் குறைவு.

சுனில் நரைன்

Cricket, IPL, IPL 2018, KKR, Gautam Gambhir

கவுதம் கம்பிரை போலவே தான் சுனில் நரைனும். கடந்த 5 வருடங்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். 2012-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வென்ற போது, அந்த சீசனில் 24 விக்கெட் எடுத்து அசத்தினார். 2013-இல் 22 விக்கெட்டும், 2014-இல் 21 விக்கெட்டும் எடுத்து, மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்ல உதவி செய்தார்.

அவரது பவுலிங் ஸ்டைல் மாற்றிய பிறகு அவரால் முன்பு போல் விக்கெட் எடுக்க முடியவில்லை, ஆனால் அவர் ரன்னும் அதிகமாக விட்டு கொடுப்பது இல்லை. பவுலிங்கில் கடந்த சீசனில் ஏமாற்றினாலும், கிறிஸ் லின் இல்லாத போது தான் தொடக்கவீரராக களமிறங்கி தன்னுடைய பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சுனில் நரைன். இதனால், இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்கவைத்து கொள்ளலாம்.

குல்தீப் யாதவ்

Cricket, IPL, IPL 2018, KKR, Gautam Gambhir

கடந்த இரண்டு வருடங்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முக்கிய வீரராக குல்தீப் யாதவ் இல்லை, ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர் என்ன செய்வார் என சர்வதேச கிரிக்கெட்டில் காட்டிவிட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதனால், எதிர்காலத்தில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பலப்படுத்த அந்த அணி குல்தீப் யாதவை தக்கவைத்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...