Loading Posts...

ஐபில் 2018: இந்த 5 வீரர்களை மும்பை அணி தக்கவைத்து கொள்ளலாம்

Cricket, IPL, Mumbai Indians, Rohit Sharma, Jasprit Bumrah, Jos Buttler, Hardik Pandya, Kieron Pollard

அடுத்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலம் பரபரப்பாக இருக்கும். 2008-இல் நடந்த முதல் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தை விட இந்த ஏலம் பெரியதாக இருக்கும். இந்தியன் பிரீமியர் லீக் அணிகளுடன் பல வீரர்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. ஒரு அணி அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என முடிவு செய்தார்கள். இதனால், மற்ற வீரர்கள் அனைவரும் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் செல்வார்கள். இந்நிலையில், மூன்று முறை ஐபில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்வார்கள் என பார்க்கலாம்.

ரோஹித் சர்மா

Cricket, IPL, Mumbai Indians, Rohit Sharma, Jasprit Bumrah, Jos Buttler, Hardik Pandya, Kieron Pollard

இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்திற்கு முன்பு ஒரு அணி ஒரு வீரரை மட்டுமே தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தால், மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய அணியின் தொடக்கவீறார் ரோகித் ஷர்மாவை தக்கவைத்து கொள்ளும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பதவி ஏற்று கொண்ட பிறகு, அந்த அணிக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டது என்று சொல்லலாம். ரோகித் ஷர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை இந்தியன் பிரீமியர் லீக் தொடரை வென்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரையும் வென்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியை முன்னிருந்து வழிநடத்தி வரும் ரோகித் சர்மா, சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த வருட ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தார் ரோகித் சர்மா (333 ரன்). அத்துடன் கடந்த ஐந்து சீசன்களாக தொடர்ந்து 300 ரன்னுக்கு மேல் அடித்து வருகிறார்.

Page 1 of 5

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...