Loading Posts...

ஸ்டார்க் எங்களை நிச்சயம் கைவிட மாட்டார்; கொல்கத்தா அணி நம்பிக்கை !!

ஸ்டார்க் எங்களை நிச்சயம் கைவிட மாட்டார்; கொல்கத்தா அணி நம்பிக்கை

ஏப்ரல் 7ம் தேதி  துவங்க உள்ள ஐ.பி.எல் தொடருக்குள் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மைக்கல் ஸ்டார்க் பூரண குணமடைந்து தங்களது அணிக்கு திரும்புவார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல் டி.20 தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட வீரர்களுக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கடந்த தொடர்களில் பெங்களூர் அணிக்காக விளையாடியவருமான ஸ்டார்க்கை இந்த முறை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் சமீபத்தில் நடந்த தொடர் ஒன்றில் ஸ்டார்கிற்கு காயம் ஏற்பட்டதால் ஸ்டார்க்கால் இந்த தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில்  இது குறித்து கருத்து தெரிவித்து கொல்கத்தா அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர். ஸ்டார் நிச்சயம் இந்த தொடரில் பங்கேற்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெங்கி மைசூர் கூறியதாவது “ஸ்டார்க் பூரண குணமடைந்து விட்டதாக நாங்கள் அறிகிறோம். விரைவில் அவர் இந்தியாவிற்கு வந்த கொல்கத்தா அணியில்  இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான கொல்கத்தா அணி;

சுனில் நரைன், ஆண்ட்ரியூ ரசல், கிறிஸ் லின், மிட்செல் ஸ்டார்க், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, நிதிஷ் ராணா, கம்லேஷ் நாகர்கொட்டி, ஷிவம் மவி, மிட்செல் ஜான்சன், சுப்மன் கில், ரங்னாத் வினய் குமார், ரின்கு சிங், கேமிரான் டில்போர்ட், ஜாவன் சியர்லெஸ், அபூர்வ் விஜய், இஷான்க் ஜாக்கி.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...