Loading Posts...

ஐ.பி.எல் 2018; மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம்..!!

ஐ.பி.எல் 2018; மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம்..

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 10 சீசன் நடைபெற்றுள்ள நிலையில், ஐ.பி.எல்.,லின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பரம எதிரியான சம பலம் கொண்ட இரு அணிகளான மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய ஜெர்சியை, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ”மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை புதிய ஜெர்சியுடன் களமிறங்குகிறது” என்று பதிவிட்டுள்ளது. மேலும் இந்த ஜெர்சி விரைவில் விற்பனைக்கும் வர உள்ளதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான மும்பை இந்தியன்ஸ் அணி;

ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பொலார்டு,  பும்ராஹ், க்ரூணல் பாண்டியா, பும்ராஹ், மிட்செல் மெக்லெங்கன், முஸ்தபிசுர் ரஹ்மான், பட் கம்மின்ஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் சஹார், ஈவின் லீவிஸ், சவுரவ் திவாரி, பென் கட்டிங், பிரதீப் சங்வான், டூமினி, தில்லன், லும்பா, ஆதித்யா தாரே, அகிலா தனன்ஞனேயா, அனுகுல் ராய், நிதிஷ்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...