Loading Posts...

ஐ.பி.எல் 2018; இந்த அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும்; பத்ரிநாத் கணிப்பு !!

ஐ.பி.எல் 2018; இந்த அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும்; பத்ரிநாத் கணிப்பு

அடுத்த மாதம் துவங்க உள்ள ஐ.பி.எல் 2018ம் ஆண்டுக்கான தொடரில் சென்னை அல்லது கொல்கத்தா அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமனியன் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 10 சீசன் நடைபெற்றுள்ள நிலையில், ஐ.பி.எல்.,லின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பரம எதிரியான சம பலம் கொண்ட இரு அணிகளான மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இரண்டு வருட தடை காலம் முடிந்து, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுப்ரமணியன் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்ரிநாத் கூறியதாவது,  “இந்த தொடரில் சென்னை அல்லது கொல்கத்தா அணியே கோப்பையை வெல்லும் என்று கருதுகிறேன், இரு அணிகளும் சிறந்த வீரர்களை தனது அணியில் வைத்து கொண்டு முழு பலம் பொருந்திய அணிகளாக உள்ளன. இரண்டு வருட தடை காலத்திற்கு மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுப்பது அவ்வளவு எளிதான விசயம் அல்ல, ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற சிறந்த வீரர்கள் இதனை உடைத்தெறிவார்கள். தோனி, ஜடேஜா, பிராவோ, ரெய்னா போன்ற கிரிக்கெட் உலகின் தலை சிறந்த வீரர்கள் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளது சென்னை அணிக்கு மிகப்பெரும் பலம் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் கடந்த சில தினங்களாக தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை சிலர் ஒப்பிட்டு பேசி வருவது குறித்து பேசிய பத்ரிநாத், தோனி மிக சிறந்த வீரர், அவரை தினேஷ் கார்த்திக்குடன் ஒப்பிடுவது சரியானது அல்ல, தோனி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான். தினேஷ் கார்த்திக்கிற்கு வங்கதேச அணியுடனான  இறுதி போட்டியின் மூலம் புதிய நம்பிக்கை கிடைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...