Loading Posts...

ஐ.பி.எல் 2018; சிறந்த கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கான பரிசை வழங்குகிறது டாட்டா மோட்டார்ஸ் !!

ஐ.பி.எல் 2018; சிறந்த கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கான பரிசை வழங்குகிறது டாட்டா மோட்டார்ஸ்

அடுத்த மாதம் துவங்க உள்ள ஐ.பி.எல் டி.20 தொடரில் சிறந்த கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கான பரிசை வழங்க டாட்டா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில்  இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

 

சூதாட்ட புகாரில் சிக்கியதால் தடை செய்யப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தனது தடை காலம் முடிந்து மீண்டும் களமிறங்க உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரின் போது சிறந்த கேட்ச் பிடிக்கும் பார்வையாளர்களுக்கான பரிசை வழங்க பிரபல தனியார் நிறுவனமான டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

ஒவ்வொரு போட்டியின் போது ஆடுகளத்திற்கு வெளியே கேலரியில் அமர்ந்து இருக்கும் ரசிகர்கள் தங்களை நோக்கி பந்துகள் வரும்போது அதனை ஒற்றை கையில் பிடிக்க வேண்டும், அப்படி பிடிப்பவர்கள் ஒருவர் சிறந்த கேட்ச் பிடித்தவராக தேர்ந்தெடுக்கப்படுவார், அவருக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு லட்சம் ரூபாயை பரிசாக வழங்கும்.

அதே போல் ஒவ்வொரு போட்டியின் போது சிறந்த சராசரி வைத்துள்ள வீரருக்கு பரிசு வழங்க உள்ள டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், தொடரின் இறுதியில் ஒட்டுமொத்த தொடரிலும் அதிக சராசரி வைத்துள்ள வீரருக்கு கார் ஒன்றையும் பரிசாக வழங்க உள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...