Loading Posts...

அனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் !!

அனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார்

பந்துவீச்சாளர்களின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் ஐ.பி.எல் தொடரே மிக முக்கிய காரணம் என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி கேப்டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தவான் 47 ரன்களும், ரெய்னா 43 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் ம்டுவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 172 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நூழிலையில் வெற்றியை தவறவிட்டு, தொடரையும் இழந்தது.

இதில் கடைசி ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் தென் ஆப்ரிக்கா அணியை தனது சாதூர்யமான பந்துவீச்சால் கட்டுப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த புவனேஷ்வர் குமார் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர் நாயகன் விருது வென்ற பின் பேசிய புவனேஷ்வர் குமார் “இந்திய பந்துவீச்சாளர்களின் முன்னேற்றத்துக்கு ஐ.பி.எல் டி.20 தொடர் மிக முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து புவனேஷ்வர் கூறியதாவது “ஒவ்வொரு தொடருக்கும் நம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்களின் முன்னேற்றத்துக்கு ஐ.பி.எல் டி.20 தொடர் மிக முக்கிய காரணம். இக்கட்டான நேரங்களில் ஸ்லோ பந்துகளை வீசுவது குறித்து கற்று கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

இந்த போட்டி குறித்து ஆட்டநாயகன் விருது வென்ற சுரேஷ் ரெய்னா கூறியதை அறிய  இங்க க்ளிக் செய்யவும்;

mujahith

......?

Loading Posts...