Loading Posts...

தோனியுடன் ஒப்பிடும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது; தினேஷ் கார்த்திக் !!

தோனியுடன் ஒப்பிடும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது; தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தன்னை ஒப்பிடுவது சரியல்ல என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை இடையேயான முத்தரப்பு டி.20 கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த தொடரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வங்கதேச அணியுடனான இறுதி போட்டியில் போட்டியின் தலையெழுத்தை வெறும் 8 பந்துகளில் மாற்றிய தினேஷ் கார்த்திக், கடைசி ஒரு பந்திற்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு பிறகு, தோனியால் தான் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார் என்றும், தோனியை விட தினேஷ் கார்த்திக்கே சிறந்த விக்கெட் கீப்பர் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து தினேஷ் கார்த்திக்கிடமே பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், தோனியுடன் தன்னை ஒப்பிடுவது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இது குறிதுது தினேஷ் கார்த்திக் கூறியதாவது, “தோனியிடம் இருந்து தான் நானே பல விசயங்களை கற்று வருகிறேன். உண்மையை சொல்லப்போனால் அவர் நடத்தும் பல்கலைகழகத்தில் நான் வெறும் சாதரண மாணவன் தான். அவர் என்னை போன்ற பலருக்கு பல உதவிகள் செய்து வருகிறார். அவர் கடந்து வந்த வெற்றி பாதையை பார்த்து மக்கள் நிறைய கற்று கொள்ளலாம்.

கிரிக்கெட் வாழ்க்கையில் எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகவே நான் இதை கருதுகிறேன். அது தான் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க எனக்கு உதவியது. இவ்வளவு ஆண்டுகளில் நான் செய்த அனைத்து நல்ல விசயங்களும் பந்து தான் கூடுதலாக இரண்டு மில்லிமீட்டர் கடக்க உதவியது. இத்தனை ஆண்டுகள் களித்து எனக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது முதல் அப்படிப்பட்ட செயல்களை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...