Loading Posts...

 ஹர்திக் பாண்டியா மீது வழக்குபதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

ஹர்திக் பாண்டியா மீது வழக்குபதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்ட மேதை அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா, கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அம்பேத்கரை இட ஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அவரது கருத்திற்கு எதிர்ப்புகள் வந்ததையடுத்து, தனது பதிவை அவர் நீக்கினார்.

இந்த சம்பவத்தையடுத்து, டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையிலும், அரசியலமைப்பு சட்டத்தை இழிவுப்படுத்தும் வகையிலும் பதிவிட்ட ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம்,இந்திய   கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்த்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீதான அவரது மனைவியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்தான பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது மேலும் ஒரு நட்சத்திர வீரர் சிக்கலில் சிக்கி இருப்பது பி.சி.சி.ஐ.,க்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது.

 

முகமது ஷமி மீதான குற்றச்சாட்டு;

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசீன் ஜஹான் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார், மேலும் பல பெண்களுடன் பேசியதற்கான ஆதரங்களையும் ஹசீன் ஜஹான் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஷமி கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ஹசீன் ஜஹான் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பி.சி.சி.ஐ.,யும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...