Loading Posts...

நீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா !!

நீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான கொல்கத்தா அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்ற கருத்து கணிப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்கள் மத்தியில் நடத்தி வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை  கோடிகளை குவித்து எடுத்து கொண்டன.

ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பெற்று ஐ.பி.எல் தொடரில் சாதிக்க காத்துள்ள நிலையில், கொலகத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் இன்னும் கேப்டனை கூட நியமிக்க முடியாமல் தவித்து வருகிறது.

கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கொல்கத்தா அணியின் பயிற்சியாளராளே சொல்லப்பட்ட கிறிஸ் லின் காயம் அடைந்துள்ளது தான், கொல்கத்தா அணியின் இந்த நெருக்கடிக்கு காரணம்.

இந்நிலையில் வேறு வழியே இன்றி கொல்கத்தா அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்ற கருத்தை ரசிகர்களிடம் கேட்டே தெரிந்து கொள்ளும் வகையில் ரசிகர்கள் மத்தியில் கருத்து கணிப்பு ஒன்றை சமூக வலைதளங்களில் நடத்தி வருகிறது.

இது குறித்து கொல்கத்தா அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கொல்கத்தா அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பதில் கொல்கத்தா அணிக்கு உதவி செய்யுமாறு பதிவிட்டுள்ளது.

இதற்கு ரசிகர்களும் கொல்கத்தா அணியின் கேப்டனாக  யார் வரலாம் என்ற தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் அதிகாமான ரசிகர்கள் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கையே முன்மொழிந்து வருகின்றனர்.

அதில் சில;

mujahith

......?

Leave a Comment

Loading Posts...