Loading Posts...

என்னை சுற்றி மிகப்பெரும் சதி நடக்கிறது; முகமது ஷமி வேதனை !!

என்னை சுற்றி மிகப்பெரும் சதி நடக்கிறது; முகமது ஷமி வேதனை

தனது குடும்பத்தை பிரிப்பதற்காக பலர் சதி செய்து வருவதாக முகமது ஷமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த சில தினங்களாக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது என்று அரம்பித்த ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் ஷமியை தீவிரவாதிகள் வரை தொடர்ப்பு படுத்தி குற்றம் சாட்டினார்.

ஹசீன் ஜஹான் வைத்த பிரதானமான குற்றச்சாட்டுகளுள் ஷமி பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டார் என்பது ஆகும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யும் ஊழல் தடுப்பு போலீஸாரும் நடத்திய விசாரணையின் முடிவில் ஷமி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் பிறகு ஷமியை வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலும் பி.சி.சி.ஐ., நேற்று இணைத்தது.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஷமி, கடந்த சில தினங்களாக தான் கடும் மன உளைச்சளை சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகமது ஷமி கூறியதாவது, என் குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த பத்து, பதினைந்து நாட்களாக மனரீதியான டார்ச்சரை அனுபவித்து வந்தேன். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. அவை கனவில் கூட நினைத்திராத கேவலமான குற்றச்சாட்டாக இருக்கிறது. எனக்குப் பின்னால் ஏதோ சதி இருக்கிறது. யாரோ, என் குடும்பத்தைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். இதில் இருந்து விரைவில் வெளிவருவேன்” என்று வேதனை கலந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...