Loading Posts...

அசுர வேக அரைசதம்; புதிய சாதனை படைத்தார் மந்தனா !!

அசுர வேக அரைசதம்; புதிய சாதனை படைத்தார் மந்தனா

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிரிதி மந்தனா 25 பந்துகளில் அரைசதம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின், மும்பையின் பிரபோர்னி மைதானத்தில் நடக்கிறது.

இத்தொடரின் 3வது போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 40 பந்தில் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகள் விளாசி 76 ரன்கள் எடுத்தார்.

மந்தனா 25 பந்தில் 50 ரன்கள் விளாசி அவரின் முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார். அதிவேகமாக அரை சதம் அடித்த ஆசிய வீரர் என்ற பெருமை பெற்றதோடு, சர்வதேச அளவில் வேகமாக அரைசதம் அடித்த பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் இந்தியா 198 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தோல்வி;

இதன் பின் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாத்தியமில்லாத இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேனியல் வியாட், பிரையோனி ஸ்மித் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். ஸ்மித் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து டேனி பியூமோன்ட் களம் இங்கினார். இவரை ஒருபக்கம் வைத்துக் கொண்டு வியாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. பியூமோன்ட் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

வியாட் 64 பந்தில் 15 பவுண்டரி, 5 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து 17-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது இங்கிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 18 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது.

இங்கிலாந்து அணி 10 பந்தில் 10 ரன்ளக் அடிக்க, 18.4 ஓவரில் 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்து. இந்த வெற்றி மூலம் 2-வது வெற்றியை ருசித்துள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...