Loading Posts...

நான் மிண்டும் தலைமையேற்க தயார்… கடுப்பான முன்னாள் வீரர் !!

நான் மிண்டும் தலைமையேற்க தயார்… கடுப்பான முன்னாள் வீரர்

சமீபத்திய கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் அட்டூழியத்தை பார்த்து கடுப்பான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க், டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் கேப்டனாக செயல்பட நான் தயார் என்று தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் இடையேயான இந்த தொடர் துவக்கத்தில் இருந்தே டி.காக் – டேவிட் வார்னர் சண்டை, ராபாடாவின் வார்த்தை போர் என சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது.

டி.காக், வார்னர் மற்றும் ரபாடாவின் பிரச்சனையை ஐ.சி.சி., கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தீர்த்து வைத்த நிலையில், நேற்று ஆஸ்திரேலிய வீரரால் புதிய சர்ச்சை கிளம்பியது.

கேப்டவுனில் தற்போது நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான கேமிரான் பென்கிராப்ட் மர்ம பொருள் ஒன்றை வைத்து பந்தை சேதப்படுத்தியுள்ளார்.

பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.

மேலும் இது குறித்து பேசிய பென்கிராப்ட், நான் இதனை செய்தது மற்ற வீரர்களுக்கும் தெரியும், அவர்களுக்கு தெரிந்து தான் செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டார், இதனை ஸ்டீவ் ஸ்மித்தும் ஒப்புக்கொண்டார், இனிமேல் இது போன்று நடக்காது என்றும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கல் கிளார்க் ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக சாடியுள்ளார்.

during day four of the 5th Investec Ashes Test match between England and Australia at The Kia Oval on August 23, 2015 in London, United Kingdom.

இது குறித்து மைக்கல் கிளார்க் கூறியதாவது, “இது திட்டமிடப்பட்ட ஏமாற்று வேலை. மோசமான சீட்டிங். இது அவமானம். யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உலகிலேயே சிறந்த பந்துவீச்சை கொண்ட அணி, ஆஸ்திரேலிய அணி. அப்படி இருக்கும்போது இப்படி ஏமாற்றி வெற்றிப்பெற முயன்றிருக்கக் கூடாது. நான் ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட வீரர் பற்றியோ, கேப்டன் பற்றியோ கருத்துக் கூற விரும்பவில்லை. கேப்டன்ஷிப்பில் இருந் து ஸ்மித் ராஜினாமா செய்ய வேண்டுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அந்த டிவி காட்சியைப் பார்த்ததும் எமோஷனாகிவிட்டேன். இப்படி செயல்படுவது ஒரு தலைமைக்கு சரியானதல்ல’ என்றார்.

மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை மீண்டும் வழநடத்தவும் தான் தயாராக உள்ளதாகவும் மைக்கெல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...