Loading Posts...

இந்த வருட ஐபில்-இல் முகமது ஷமி விளையாட வாய்ப்புள்ளது

Cricket, Mohammed Shami, India,

முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி அசின் ஜஹான் பகிர் பேட்டி அளித்துள்ளார். மற்ற பெண்களுடன் உரையாடும் உரையாடலை தனது முகநூல் புத்தகத்தில் பதிவு செய்தார் அசின். இதனால், முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கையும் சந்தேகத்தில் இருக்கிறது.

கொல்கத்தாவில் மாடலாக இருந்த அசின் ஜஹான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நடன அழகியாகவும் இருந்தார். அசினை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் முகமது ஷமி. நான்கு வருடம் கழித்து, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பாக அவரது மனைவி கூறினார்.

கிரிக்கெட்டில் பிக்சிங் செய்திருக்கிறார் என அசின் கூற பிரச்சனை விறுவிறுப்பானது. மேலும், கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் முகமது ஷமி மீது புகார் கொடுத்தார் அசின் ஜஹான். இதனால் பெய்லில் முகமது ஷமியை வெளியே எடுக்காத படி கொல்கத்தா போலீஸ் அவர் மீது வழக்கு. குடும்ப பிரச்சனை மற்றும் பல பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டது மட்டும் இல்லாமல், அலிஸ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டினார்.

Cricket, Mohammed Shami, India,

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ள முகமது ஷமி இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட ஒப்பந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. மேலும், அவர் இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியது.

கிடைத்த தகவலின் படி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கும் முகமது ஷமி அடித்த ஐபில்-இல் விளையாட எந்த தடையும் இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த முடிவு நேற்று ஐபில் கவுன்சில் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

“முகமது ஷமி ஐபில்-இல் விளையாட சம்மதிக்கிறோம். அவருடைய சொந்த வாழ்வில் என்ன நடந்தாலும், அது அவருடைய கிரிக்கெட்டை பாதிக்காது என நினைக்கிறோம். அவர் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர், அவர் தொடர்ந்து ஐபில் இல் விளையாடுவார்,” என பிசிசிஐ அதிகாரி கூறினார்.

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...