Loading Posts...

பிரச்சனையில் இருந்து விடுபட்டார் ஷமி… பச்சை கொடி காட்டியது பி.சி.சி.ஐ., !!

பிரச்சனையில் இருந்து விடுபட்டார் ஷமி… பச்சை கொடி காட்டியது பி.சி.சி.ஐ.,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை, இந்திய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் சேர்க்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

என்ன பிரச்சனை;

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது அவரது ஹசீன் ஜஹான் கடந்த சில தினங்களாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

 

ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது ஷமி மீதான குற்றச்சாட்டை துவங்கிய அவரது மனைவி ஹசீன் ஷமிக்கு தீவிரவாதிகள் வரையில் தொடர்பு படுத்தி பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

மேலும் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கடந்த இரண்டு வருடங்களாக கொடுமை படுத்தியாகவும், தன்னை கொலை செய்யவும் முயன்றதாகவும் ஹசீன் ஜஹான் அளித்த புகாரின் பேரில் கொல்கத்தா போலீஸார் ஷமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஷமி பாகிஸ்தானில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பணம் பெற்று கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுப்பட்டிருப்பார் என்றும் அவர் மீது ஹசீன் ஜஹான் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை பி.சி.சி.ஐ.,யிடமும்  முன்வைத்தார். அடுத்த சில தினங்களில் ஹசீன் ஜஹான் மேற்கு வங்க முதல்வரையும் சந்திக்க உள்ளார்.

ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கம்;

ஷமி மீதான இந்த அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக, சமீபத்தில் வெளியான இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை.

இதனால் ஷமியின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில், இது குறித்து பி.சி.சி.ஐ.,யும் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தியது. மேலும் ஊழல் தடுப்பு போலீஸாரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஷமியின் வீட்டில் விசாரணை நடத்தினர்.

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

பி.சி.சி.ஐ., க்ரீன் சிக்னல்;

ஊழல் தடுப்பு போலீஸாரின் விசாரணை முடிவில் ஷமி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்துள்ளதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை இந்திய வீரர்களுக்க்கான ஒப்பந்த பட்டியலில் இணைக்க பி.சி.சிஐ., முடிவு செய்துள்ளது.

 

அதன் படி முகமது ஷமி, பி கிரேட் வரிசையில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு வருடத்திற்கான சம்பளமாக மூன்று கோடி ரூபாய் கிடைக்கும்.

ஐ.பி.எல்;

இந்திய அணியில் விளையாடவே தற்போது பி.சி.சி.ஐ., ஒப்புதல் வழங்கியுள்ளதால் ஷமி அடுத்த மாதம் துவங்க உள்ள ஐ.பி.எல் டி.20 தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடுவதில் இனி எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெரிகிறது.

தன் மீதான குற்றச்சாட்டிற்கு ஷமியின் விளக்கம்;

என்னை சுற்றி மிகப்பெரும் சதி நடக்கிறது. என்னுடன் உள்ளவர்களே எனது முன்னேற்றத்தை தடுக்க பல சதி செயல்களை செய்து வருகின்றனர். என் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படை ஆதரமற்றவை. இது எனது கிரிக்கெட் வாழ்வை முடக்குவதற்கு சிலர் செய்யும் சதிச்செயலாகும்.

 

ஷமி மகளின் வேண்டுகோள்;

ஹசீன் ஜஹானின் மூத்த கணவரின் மகள் இது குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனது தாயும் முகமது ஷமியும் தங்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகளை மறந்து விரைவில் ஒன்று சேர வேண்டும். ஷமி மிகவும் நல்லவர். என்னையும் எனது சகோதரியையும் தனது சொந்த மகளை போன்ற பார்த்து கொள்வார். எங்களுக்கு பள்ளி விடுமுறை கிடைக்கும் நாட்களில் அவரே வந்து எங்களை காரில் அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்வார். எங்களையும் அவர்களது குடும்ப உறுப்பினராகவும், சொந்த மகளாகவுமே இதுவரை பார்த்து வந்தார். ஆனால் அவர் ஏன் இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. ஷமியும் எனது தாயும் ஒருவரை ஒருவர் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பது எனக்கு தெரியும் விரைவில் அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...