Loading Posts...

அட்டூழியம் செய்த ஆஸ்திரேலியாவிற்கு சரியான பதிலடி கொடுத்தது தென் ஆப்ரிக்கா !!

அட்டூழியம் செய்த ஆஸ்திரேலியாவிற்கு சரியான பதிலடி கொடுத்தது தென் ஆப்ரிக்கா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.

கேப் டவுனில் நடைப்பெற்ற 3வது டெஸ்ட் போட்டி முழுவதும் தென் ஆப்ரிக்கா ஆதிக்கம் செலுத்தியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ 311 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 255 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

2வது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் 84, டிவில்லியர்ச் 63, டி காக் 65, பிலேண்டர் 52 ரன்கள் விளாச 373 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 430 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

 

இதனையடுத்து  430 ரன் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. 57 ரன்னுக்கு முதல் விக்கெட் இழந்த ஆஸி, மார்க்கல் 5 விக்கெட், கேசவ் மகாராஜ் 2 விக்கெட் வீழ்த்த அடுத்த 50 ரன் எடுப்பதற்குள் 107 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்து 322 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...