Loading Posts...

முகமது ஷமிக்கு ஆதரவாக பேசிய மகேந்திர சிங் தோனி

Cricket, India, Ms Dhoni, BCCI, BCCI Contract List

பல பிரச்சனைகளுக்கு நடுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆதரவு பெற்றுள்ளார் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி அசின் ஜஹான் பகிர் பேட்டி அளித்துள்ளார். மற்ற பெண்களுடன் உரையாடும் உரையாடலை தனது முகநூல் புத்தகத்தில் பதிவு செய்தார் அசின். இதனால், முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கையும் சந்தேகத்தில் இருக்கிறது.

கொல்கத்தாவில் மாடலாக இருந்த அசின் ஜஹான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நடன அழகியாகவும் இருந்தார். அசினை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் முகமது ஷமி. நான்கு வருடம் கழித்து, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பாக அவரது மனைவி கூறினார்.

“கடந்த இரண்டு வருடமாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் என்னை வற்புறுத்துகிறார். ஷமியை திருமணம் செய்த பிறகு என்னுடைய வேலைகளை விட்டுவிட்டேன். விராட் கோலியை போலவே, அவரும் பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய நினைக்கிறார். என்னை திருமணம் செய்தது தான் அவர் செய்த மிக பெரிய குற்றம் என நினைக்கிறார்,” என ஷமியின் மனைவி அசின் கூறினார்.

“என்னிடம் அவர் தொடர்ந்து விவாகரத்து கேட்டு கொண்டே இருக்கிறார். 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்ற போது எனக்கு பதிலாக அவரது பாகிஸ்தான் காதலியை அழைத்து செல்ல இருந்தார். அவரின் சகோதரரிடம் கூறி என்னை கொலை செய்து ஏதாவது ஒரு காட்டில் வீச சொன்னார் ஷமி. பார்ட்டிக்கு செல்லும் போது கூட அவர் என்னை அழைத்து செல்ல மாட்டார்,” என அவரது மனைவி மேலும் தெரிவித்தார்.

மேலும் அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் முகமது ஷமியின் மனைவி பகீர் பேட்டி அளித்துள்ளார்.

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

“அவர் பல பெண்களுடன் தொடர் வைத்துள்ளார். சிலர் இந்தியாவில் இருக்க, சிலர் பாகிஸ்தானிலும், ஐரோப்பாவில் உள்ள நாடுகளிலும் இருக்கிறார்கள். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஹோட்டல்களில் அவர் அந்த பெண்களுடன் தங்குவது வழக்கம். வீடியோ கால் மூலமாகவும் அவர் அந்த பெண்களிடம் பேசுவார்,” என அவரது மனைவி தெரிவித்தார்.

அவரது மனைவி அளித்த புகாரினால், கொல்கத்தாவில் உள்ள போலீஸ் அவரின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால், அவரது பெயர் பிசிசிஐ அறிவித்த காண்ட்ராக்ட் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால், கபில் தேவ், தோனி ஆகியோர்களிடம் இருந்து அவருக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

Cricket, India, Ms Dhoni, Mark Boucher, South Africa

MELBOURNE, AUSTRALIA – FEBRUARY 22: MS Dhoni, captain of India looks on after South Africa hit a boundary during the 2015 ICC Cricket World Cup match between South Africa and India at Melbourne Cricket Ground on February 22, 2015 in Melbourne, Australia. (Photo by Scott Barbour/Getty Images)

“எனக்கு தெரிந்த வரை, அவர் நல்ல மனிதர். அவரது மனைவியையோ, அவரது நாட்டையோ அவர் ஏமாற்ற மாட்டார். இது அவருடைய குடும்ப பிரச்சனை, இதனால் அதை பற்றி நாம் பேச கூடாது. அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர், இந்த விளையாட்டின் மீது அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும்,” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறினார்.

நன்றி: பஞ்சாப் கேஷ்ரி

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...