Loading Posts...

நாங்க அப்படி சொல்லவே இல்ல… ஷமி மனைவி தரப்பு திடீர் பல்டி !!

நாங்க அப்படி சொல்லவே இல்ல… ஷமி மனைவி தரப்பு திடீர் பல்டி !!

முகமது ஷமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் கூறவே இல்லை என்று ஹசீன் ஜஹானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த சில தினங்களாக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது என்று அரம்பித்த ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் ஷமியை தீவிரவாதிகள் வரை தொடர்ப்பு படுத்தி குற்றம் சாட்டினார்.

ஹசீன் ஜஹான் வைத்த பிரதானமான குற்றச்சாட்டுகளுள் ஷமி பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டார் என்பது ஆகும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யும் ஊழல் தடுப்பு போலீஸாரும் நடத்திய விசாரணையின் முடிவில் ஷமி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் பிறகு ஷமியை வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலும் பி.சி.சி.ஐ., நேற்று இணைத்தது.

இந்நிலையில் ஹசீன் ஜஹான், ஷமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஹசீன் ஜஹான் கூறவே இல்லை என்று ஹசீன் ஜஹானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹசீன் ஜஹானின் வழக்கறிஞர் கூறியதாவது, ஷமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நாங்கள் எந்த நேரடியான குற்றச்சாட்டையும் எழுத்துப்பூர்வமாகவோ, வாய் வாழியாகவோ சொல்லவில்லை. ஆனால் பிசிசிஐ., எந்த அடிப்படையில் விசாரணை நடத்தியது என்பது குறித்து தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...