Loading Posts...

சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரருக்கு தடை விதித்தது ஐ.சி.சி !!

சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் வீரருக்கு தடை விதித்தது ஐ.சி.சி

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சாஸைப் ஹசன் என்னும் இளம் வீரருக்கு 1 வருட காலம் கிரிக்கெட் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இதனை அப்படியே காப்பியடித்து அஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பிக்பேஸ் லீக் என்ற பெயரிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரிலும் ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர்கள் நடத்தி வருகின்றன.

இதில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மூன்றாவது சீசன்  தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கராச்சி அணிக்காக விளையாடி வரும் சாஸைப் ஹசன் என்னும் இளம் வீரர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது.

போட்டியின் போது அவரது செய்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து அவர் மீது ஒரு வருட கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதனால் தடை செய்யப்பட்ட வீரர்கள் இவர் ஐந்தாவது வீரராவார். இது முதல் முறை என்று எண்ணிவிட வேண்டாம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இதனை அப்படியே காப்பியடித்து அஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பிக்பேஸ் லீக் என்ற பெயரிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரிலும் ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர்கள் நடத்தி வருகின்றன.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...