Loading Posts...

இந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் அணியை கோப்பை வெல்ல வைப்பார் அஸ்வின் : கணிக்கிறார் பத்ரினாத்

கிங்ஸ் லெவன் அணியி. கேப்டன் அஸ்வினை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தமிழக வீரருமான பத்ரிநாத். அஸ்வினால் கிங்ஸ் லெவன் அணிக்கு கோப்பை பெற்று தர முடியும். அந்த அளவிற்கு அவரிடம் திறமை உள்ளது எனக் கூறியள்ளார் பத்ரிநாத்.

2018ம் ஆண்டு ஐபிஎல் சீசன் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக தமிழக வீரரும், இந்திய அணியின் ஆப் ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.badrinath ashwin க்கான பட முடிவு

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் வழிகாட்டி வீரேந்திர சேவாக் இந்த தகவலை பேஸ்புக் லைவ் மூலம் அறிவித்தார்.

ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக ரவிச்சந்திர அஸ்வின் இடம் பெற்று இருந்தார். ஆனால், சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் தடை பெற்றபின், ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தடை முடிந்து, சமீபத்தில் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் நடந்தது. இந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை தக்கவைக்காமல் கழற்றிவிட்டு, ஹர்பஜன் சிங்கை எடுத்துக்கொண்டது.badrinath ashwin க்கான பட முடிவு

ஆனால், சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்த கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரூ.7.6 கோடிக்கு அஸ்வினை விலைக்கு வாங்கியது. இதனால், பஞ்சாப் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த மேக்ஸ்வெல் டெல்லி அணிக்குச் சென்றுவிட்டதால், கேப்டன் பொறுப்பை அஸ்வின் ஏற்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. அதற்கேற்ற அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் ஒருநாள் அணியிலும், டி20, டெஸ்ட் அணியிலிருந்தும் ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள அஸ்வின், தற்போது களத்தில் கேப்டன் என்ற பதவியுடன், விராட் கோலியையும், தோனியையும் சந்திக்க இருக்கிறார்.badrinath ashwin க்கான பட முடிவு

இந்த அறிவிப்புக்கு பின் அஸ்வின் பஞ்சாப் அணியின் இணையதளத்தில் கூறுகையில், ‘ நான் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு கொடுத்துள்ள பொறுப்பை உணர்ந்து, அனைத்து திறமையான வீரர்களையும் சிறப்பாக வழிநடத்துவேன். அணியின் சிறப்பான பங்களிப்பை களத்திலும் வெளிப்படுத்துவேன். இந்த தருணம் எனக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டதால், கூடுதலாக எந்தவிதமான அழுத்தமும், நெருக்கடியும் ஏற்படவில்லை. ஏற்கனவே நான் 21வயதில் இருக்கும்போது, இந்திய முதல்தர அணியை வழிநடத்தி இருக்கறேன்.இதற்கு முன் பலமுறை அணிக்கு தலைமை ஏற்று இருக்கிறேன் என்பதால், மகிழ்ச்சியுடன் இந்த பணியைச் செய்வேன்’ எனத் தெரிவித்துள்ளார்.badrinath ashwin க்கான பட முடிவு

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ நம்முடைய அணியை வழிநடத்த புதிய மன்னர் கிடைத்து இருக்கிறார். இந்த பஞ்சாப் அணியை பாதுகாக்க வரும் ராஜாவுக்கு வாழ்த்துக்கள். நம்முடைய புதிய கேப்டன் அஸ்வின் ரவிச்சந்திரன்’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 111 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 100 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார்.

இதற்கு முன் கேப்டன்கள்:

இதற்கு முன் பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல்(ஆஸி.2017), முரளி விஜய்(இந்தியா 2016), டேவிட் மில்லர்(தெ.ஆப்பிரிக்கா 2016), ஜார்ஜ் பெய்லி(ஆஸி. 2014,2015), டேவிட் ஹசி(ஆஸி. 2012, 2013), ஆடம் கில்கிறிஸ்ட்( ஆஸி. 2011, 2012), மகிளா ஜெயவர்த்தனா(இலங்கை, 2010), குமாரா சங்கக்கரா(இலங்கை 2009), யுவராஜ் சிங்( இந்தியா, 2008),

கிங்ஸ்லெவன் அணி விவரம்:

ரவிச்சந்திர அஸ்வின்(கேப்டன்), அக்சர் படேல், கருண் நாயர், கே.எல். ராகுல், டேவிட் மில்லர், ஆரோன் பிஞ்ச், யுவராஜ் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மயாங்க் அகர்வால், அங்கித் சிங் ராஜ்பூத், மனோஜ் திவாரி, மோகித் சர்மா, முஜிப் ஜத்ரன், பரிந்திரன் ஸ்ரன், ஆன்ட்ரூ டை, அக்ஸ்தீப் நாத், பென் துவர்சூயிஸ், மயங்க் டாகர், பிரதீப் சாகு, கிறிஸ் கெயில், மன்சூர் தார்.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...