Loading Posts...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுகிறார் ஸ்டீவ் ஸ்மித்..?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுகிறார் ஸ்டீவ் ஸ்மித்..?

அடுத்தடுத்து பல ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித்தை, கேப்டன் பதவியில் இருந்து நீக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் இடையேயான இந்த தொடர் துவக்கத்தில் இருந்தே டி.காக் – டேவிட் வார்னர் சண்டை, ராபாடாவின் வார்த்தை போர் என சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது.

டி.காக், வார்னர் மற்றும் ரபாடாவின் பிரச்சனையை ஐ.சி.சி., கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தீர்த்து வைத்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரரால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
கேப்டவுனில் தற்போது நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான கேமிரான் பென்கிராப்ட் மர்ம பொருள் ஒன்றை வைத்து பந்தை சேதப்படுத்தியுள்ளார்.

பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து தானாக விலக வேண்டும் என்று கருத்து வலுத்து வருகிறது.

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ் கேட்பதற்கு டிரெசிங் ரூமை பார்த்தது, எதிரணி வீரர்களுடன் தேவையே இல்லாமல் சண்டை போடுவது என தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஸ்டீவ் ஸ்மித் இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்க கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்குள்ளே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் இதன் எதிரொலியாக அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ள ஐ.பி.எல் டி.20 தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித்தை நீக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதே போல் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில், ரஹானே அல்லது பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

பந்தை சேதப்படுத்தியது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது;

உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்கிராப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் கேப்டனாகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுகிறது. வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்கக்கூடாது’ என்றார்.

 

mujahith

......?

Leave a Comment

Loading Posts...